பிகில் பாண்டியம்மாளின் மிரள வைக்கும் போட்டோஷூட்.. என்னம்மா இப்படி அசத்துறீங்களே !
சென்னை : பிரபல காமெடி நடிகரும் தொலைக்காட்சி நடிகருமான ரோபோ ஷங்கரின் மகள் இந்திரஜா சமீபத்தில் வெளியான பிகில் திரைப்படத்தில் தனது அட்டகாச நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.
Recommended Video
பாண்டியம்மாள் என்ற கதாபாத்திரத்தில் நடித்த இவர் பலரையும் வெகுவாக கவர்ந்த இந்நிலையில் தமிழ் ரசிகர்கள் அனைவருக்கும் மிகவும் பரிச்சயமானார்.
பிகில் திரைப்படத்திற்குப் பிறகு ஒரு சில திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கும் இந்திரஜா இப்பொழுது நாட்டில் பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளை தத்ரூபமாக சித்தரிக்கும் வகையில் எடுத்துள்ள போட்டோஷூட் புகைப்படங்கள் அனைவரையும் பாராட்ட வைத்ததோடு வைரலாகி வருகிறது.

வசூல் சாதனைகளை
சென்ற ஆண்டு தீபாவளி கொண்டாட்டத்துடன் வெளியான பிகில் திரைப்படம் அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்து மாபெரும் வெற்றி பெற்று பல வசூல் சாதனைகளை செய்தது.

ஆரவாரமாக
விஜய் முதல் முறையாக பெண்கள் கால் பந்தாட்ட பயிற்சியாளராக நடித்திருந்த இந்த திரைப்படம் பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று ஆரவாரமாக கொண்டாடப்பட்டது.

பாண்டியம்மா கதாபாத்திரத்தில்
இவ்வாறு பெண்கள் கால் பந்தாட்ட விளையாட்டை மையமாகக் கொண்டு உருவான பிகில் திரைப்படத்தில் பிரபல காமெடி நடிகரும் தொலைக்காட்சி நடிகருமான ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா பாண்டியம்மா என்ற கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் கவர்ந்திருப்பார்.

முதல் திரைப்படத்திலேயே
பிகில் திரைப்படத்தில் பாண்டியம்மா வரும் காட்சிகள் சில நேரம் நம் அனைவரையும் சிரிக்க வைத்தாலும், ஒரு சில காட்சிகளில் நம் கண்களில் நீர் வழிய வைத்திருக்கும் அந்த அளவிற்கு நடித்த முதல் திரைப்படத்திலேயே சிறந்த நடிப்பை வெளிக்காட்டி அனைவரின் பாராட்டுகளையும் பெற்றிருப்பார்.

அனைவரையும் மிரட்டி
இவ்வாறு பிகில் திரைப்படம் இவருக்கு கொடுத்த மாபெரும் அறிமுகத்தைத் தொடர்ந்து இப்பொழுது பல்வேறு திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கும் இந்திரஜா சமீபகாலமாக பல போட்டோ ஷூட்களில் எடுத்த வித்தியாசமான புகைப்படங்களை வெளியிட்டு அனைவரையும் மிரட்டி வந்தார்.

பெண்களை புனிதமாக பார்க்கும்
சமீப காலமாகவே பல்வேறு நாடுகளில் பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்கொடுமைகள் நாளுக்கு நாள் பெருகிக்கொண்டே போகும் நிலையில் இந்தியாவில் பெண்களை புனிதமாக பார்க்கும் அதே சமயம் தினந்தோறும் பல பெண்கள் பாலியல் வன்கொடுமைகள் நடந்தேறி வருகிறது.

பலரின் கண்களிலும் கண்ணீரை
அதற்காக பல்வேறு கடுமையான சட்டங்கள் நிறைவேற்றப்பட்டாலும் இன்றுவரை தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்கொடுமைகளை சித்தரிக்கும் வகையில் பாண்டியம்மா நடத்தியுள்ள போட்டோ ஷூட் புகைப்படங்கள் பலரின் கண்களிலும் கண்ணீரை வரவழைத்ததோடு பாராட்டுகளையும் பெற்று வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











