தொடர்ந்து ஐசியுவில் நடிகர் இர்ஃபான் கான்.. என்ன ஆனது.. எப்படி இருக்கிறார்? செய்தி தொடர்பாளர் தகவல்!

சென்னை: நடிகர் இர்ஃபான் கான் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவரது உடல்நிலை குறித்து அவரது செய்தி தொடர்பாளர் தகவல் தெரிவித்துள்ளார்.

Recommended Video

Bollywood Actor Irfan Khan Serious Health condition | Lock Down | Bollywood Buzz

பாலிவுட் மற்றும் ஹாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் இர்ஃபான் கான். இவருக்கு இந்தியா மட்டுமின்றி உலகம் முழுக்கவும் ரசிகர்கள் உள்ளனர்.

இந்நிலையில் நேற்று திடீரென உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். இதனால் உடனடியாக மும்பையில் உள்ள கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் இர்ஃபான் கான் அனுமதிக்கப்பட்டார்.

தீவிர சிகிச்சைப் பிரிவு

தீவிர சிகிச்சைப் பிரிவு

தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சையளித்து வருகின்றனர். நடிகர் இர்ஃபான் கான் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவல் தீயாய் பரவியது. இதனால் பதறிய அவரது ரசிகர்கள், ஐசியுவில் அட்மிட் செய்யும் அளவுக்கு அவருக்கு என்ன ஆனது? என கவலை அடைந்தனர்.

உண்மைதான்

உண்மைதான்

சமூக வலைதளங்களிலும் இர்ஃபான் கான் நலம் பெற வேண்டி கருத்துக்களை பகிர்ந்து வந்தனர். இந்நிலையில் இர்ஃபான் கானுக்கு என்ன ஆனது? அவரது உடல்நிலை எப்படி உள்ளது என்பது குறித்து அவரது செய்தி தொடர்பாளர் தகவல் தெரிவித்திருக்கிறார். நடிகர் இர்ஃபான் கான் மும்பை கோகிலா பென் மருத்துவமனையில் ஐசியுவில் அனுமதிக்கப்பட்டிருப்பது உண்மைதான் என்றார்.

பெருங்குடல் தொற்று

பெருங்குடல் தொற்று

அவருக்கு பெருங்குடல் தொற்று ஏற்பட்டதால் அவருக்கு ஐசியுவில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அனைவருக்கும் அவரது உடல்நிலை குறித்த அப்டேட் வழங்கப்படும். அவர் மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளார். அவரது வலிமையும் தைரியமும் இதுவரை போரிடவும் போராடவும் அவருக்கு உதவியது.

ரசிக்ரகளின் பிரார்த்தனை

ரசிக்ரகளின் பிரார்த்தனை

அவருடைய மன உறுதி மற்றும் அவரது அனைத்து நலம் விரும்பிகளின் பிரார்த்தனைகளால் அவர் விரைவில் குணமடைவார் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என இர்ஃபான் கானின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

இறுதிச்சடங்கில் பங்கேற்கவில்லை

இறுதிச்சடங்கில் பங்கேற்கவில்லை

கடந்த வாரம் இர்ஃபான் கானின் தாயார் சயீதா பேகம் ஜெய்ப்பூரில் காலமானார். லாக்டவுன் காரணமாக தாயின் இறுதிச்சடங்கில் அவரால் பங்கேற்க முடியவில்லை. இந்நிலையில் திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு ஐசியுவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் இர்ஃபான் கான்.

புற்றுநோய்க்கு சிகிச்சை

புற்றுநோய்க்கு சிகிச்சை

இர்ஃபான் கான் கடந்த 2018 ஆம் ஆண்டு முதலே புற்றுநோய்க்கு சிகிச்சை எடுத்து வருகிறார். இதனால் அடிக்கடி வெளிநாடு சென்று வருகிறார். 54 வயதான நடிகர் இர்ஃபான் கான் கடந்த ஓராண்டாக திரைப்படங்களிலும் நடிக்காமல் இருந்தார்.

அங்க்ரேஸி மீடியம்

அங்க்ரேஸி மீடியம்

மும்பையில் மனைவி மற்றும் மகன்களுடன் வசித்து வருகிறார் இர்ஃபான் கான். தற்போது இர்ஃபானின் மனைவி சுதபா சிக்தர் மற்றும் அவரது இரண்டு மகன்கள் பபில் மற்றும் அயன் ஆகியோர் மருத்துவமனையில் உடன் உள்ளனர். இந்த ஆண்டின் தொடக்கத்தில் இர்ஃபான் நடித்த 'அங்க்ரேஸி மீடியம்' திரைப்படம் வெளியானது.

ஒப்பந்தமாகவில்லை

ஒப்பந்தமாகவில்லை

ஊரடங்குக்கு முன் கடைசியாக வெளியான இப்படம் ஒரு நாள் மட்டுமே திரையரங்கில் ஓடியது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதால் அந்தப் படம் ஆன்லைனில் ரிலீஸ் செய்யப்பட்டது. அந்தப் படத்திற்கு பிறகு இர்ஃபான் கான் எந்த படத்திலும் ஒப்பந்தமாகவில்லை என்பது குறிப்பிடத்க்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X