'கொரோனா காலத்தில் தன்னம்பிக்கை..' யூடியூப்பில் எம்.ஜி.ஆர்.வாழ்க்கை வரலாற்றை வெளியிட்ட நடிகர்!

By

சென்னை: எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாறை வீடியோக்களாக மாற்றி இருக்கிறார் நடிகர் ஒருவர்.

Recommended Video

M G Ramachandran (MGR) Life History • எம்ஜிஆரின் வாழ்க்கை வரலாறு

குற்றாலம், அராத்து உள்பட சில படங்களில் நடித்தவர் ஜெ.எம்.பஷீர். இப்போது முத்துராமலிங்க தேவரின் வாழ்க்கை கதையை, 'தேசிய தலைவர்' என்ற பெயரில் படமாக உருவாக்குகிறார்.

இதில் முத்துராமலிங்கத் தேவராக அவரே நடிக்கிறார். இதற்கு இளையராஜா இசை அமைப்பதாகக் கூறப்படுகிறது.

எம்.ஜி.ஆர் வாழ்க்கை

எம்.ஜி.ஆர் வாழ்க்கை

இந்நிலையில் எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாறை 25 வீடியோக்களில் வெளியிட்டுள்ளார், பஷீர். எம்.ஜி.ஆர் பெருமைகளை இளைய தலைமுறையினர் அறிந்துகொள்ளும் விதமாக ‘ஹிஸ்ட்ரி ஆப் லெஜன்ட் எம்.ஜி.ஆர்' என்ற தலைப்பில் 25 பாகங்களை கொண்ட வீடியோக்களாக உருவாக்கி, யூடியூப்பில் இவர் பதிவேற்றியுள்ளார்.

எட்டாவது வள்ளல்

எட்டாவது வள்ளல்

பத்திரிகையாளர் மணவை பொன்.மாணிக்கம் எழுதிய எட்டாவது வள்ளல் எம்.ஜி.ஆர் மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட புகழ்மன செம்மல் எம்.ஜி.ஆர் ஆகிய புத்தகங்களில் இடம்பெற்ற எம்.ஜி.ஆர் குறித்த சுவாரஸ்யமான நிகழ்வுகளை படித்து நெகிழ்ந்த பஷீர், அவற்றை வீடியோக்களாக உருவாக்கி இருக்கிறார்.

உடையலங்கார நிபுணர்

உடையலங்கார நிபுணர்

இதுபற்றி ஜெ.எம்.பஷீர், கூறும்போது, 'என் தந்தை ஜமால், எம்.ஜி.ஆர் மீது கொண்ட பற்று காரணமாக, அவரது படங்களில் உடையலங்கார நிபுணராக பணியாற்றினார். எனக்கு எம்.ஜி.ஆரை நேரில் சந்திக்கும் பாக்கியம் கிடைக்கவிலையே தவிர, அப்பா மூலமாக அரைப்பற்றி கேட்டபடி எம்.ஜி.ஆர் ரசிகனாகத்தான் வளர்ந்தேன். அவரை பார்த்துதான் மற்றவர்களுக்கு உதவும் குணத்தையும் வளர்த்துக் கொண்டேன்.

தன்னம்பிக்கை

தன்னம்பிக்கை

அந்த புத்தகங்களை படித்த போது தெரிந்து கொண்ட விஷயங்கள் மற்றும் எம்ஜிஆர் பற்றி ஏற்கனவே அறிந்து கொண்ட விஷயங்களை வைத்து வீடியோவாக உருவாக்கி இருக்கிறேன். இந்த வீடியோக்களை சுமார் 10 மில்லியன் பேர் பார்த்து ரசித்துள்ளனர். இந்த கொரோனா காலத்தில் மனச்சோர்வு அடைந்துள்ள இளைஞர்களை உற்சாகப்படுத்தி தன்னம்பிக்கை அளிப்பவையாக இந்த வீடியோக்கள் இருக்கும் என்கிறார் பஷீர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X