'POLICE STORY'-யில் நடித்த பிரபல டைரக்டர் மறைவு... ஜாக்கி சான் இரங்கல்

ஹாங்காங் : ஹாங்காங்கை சேர்ந்த பிரபல இயக்குநர், திரைக்கதை ஆசிரியர் மற்றும் சோர் யுவான் காலமானார்.

ஜாக்கி சானுடன் போலீஸ் ஸ்டோரி உள்ளிட்ட 4 படங்களில் சோர் யுவான் இணைந்து நடித்துள்ளார்.

இந்நிலையில் சோர் யுவானின் மறைவுக்கு ஜாக்கி சான் இரங்கல் தெரிவித்துள்ளார்.

பிரபல டைரக்டர்

பிரபல டைரக்டர்

பிரபல இயக்குநர், நடிகர் மற்றும் திரைக்கதை ஆசிரியர் சோர் யுவன். ஹாங்காங்கை சேர்ந்த இவர் 120க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ளார். 40 படங்களுக்கும் மேல் நடித்துள்ளார் மற்றும் 70 படங்களுக்கும் மேல் திரைக்கதை எழுதியுள்ளார். இவரது நடிப்பு மற்றும் இயக்கம் ரசிகர்களை உற்சாகத்திற்கு உள்ளாக்கியவை.

உடல்நலக்குறைவால் மறைவு

உடல்நலக்குறைவால் மறைவு

87 வயதான சோர் கடந்த 20ம் தேதி உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். சில மணிநேரங்களிலேயே சிகிச்சை பலனின்றி அவரது குடும்பத்தார் முன்னிலையில் அவர் உயிரிழந்தார். அவருக்கு ஒரு மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.

நடிகராக பயணத்தை துவக்கியவர்

நடிகராக பயணத்தை துவக்கியவர்

சோரின் தந்தையும் ஒரு நடிகராக இருந்த நிலையில், இவர் நடிகராகவும் தனது சினிமா பயணத்தை துவங்கினார். கடந்த 1954ல் மேடம் யுன் என்ற படத்தில் நடித்தார். தொடர்ந்து 1956ல் முதல் திரைக்கதையை ப்ளவர் பெட்டல்ஸ் இன் தி வைண்ட் என்ற படத்திற்காக எழுதினார். தொடர்ந்து உதவி இயக்குநராகவும் சில படங்களில் பணிபுரிந்த இவர் இயக்குநராக தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார்.

ஜாக்கியுடன் 4 படங்கள்

ஜாக்கியுடன் 4 படங்கள்

இடையிடையே நடிக்கவும் செய்தார். ஜாக்கி சானுடன் இணைந்து போலீஸ் ஸ்டோரி, போலீஸ் ஸ்டோரி 2, ட்வின் ட்ராகன்ஸ் மற்றும் தன்டர்போல்ட் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இந்தப் படங்களில் இவரது நடிப்பு மிகவும் சிறப்பான வரவேற்பை பெற்றன. கு லாங்குடன் இணைந்து பல படங்களுக்கு திரைக்கதை எழுதினார் சோர் யுவான்.

ஜாக்கி சான் இரங்கல்

ஜாக்கி சான் இரங்கல்

இதனிடையே சோர் யுவானின் மறைவு குறித்து அறிந்து தான் வருந்தியதாகவும் போலீஸ் ஸ்டோரி பாகங்களில் இருவரும் இணைந்து பணியாற்றியது மறக்க முடியாதது என்றும் பிரபல நடிகர் ஜாக்கி சான் தெரிவித்துள்ளார். சோர் யுவனின் சில அறிவுரைகளையும் அவர் நினைவு கூர்ந்துள்ளார்.

எதிர்காலம் சிறப்பாக இருக்கும்

எதிர்காலம் சிறப்பாக இருக்கும்

கடந்த காலத்தில் எவ்வளவு பணக்காரனாக நீ இருந்தாய் என்பதும் எவ்வாறு தோற்கடிக்கப்பட்டாய் என்பதும் முக்கியமில்லை. மறுநாள் எழும்போது நம்முடைய வாழ்க்கையை நாம் வாழ வேண்டும். கடந்த காலத்தைவிட எதிர்காலம் எப்போதுமே சிறப்பாகவே இருக்கும் என்று சோர் யுவான் தன்னிடம் ஒரு நேரத்தில் தெரிவித்ததாக ஜாக்கி சான் குறிப்பிட்டுள்ளார்.

அறிவுரைகள் நினைவில் இருக்கும்

அறிவுரைகள் நினைவில் இருக்கும்

சோர் யுவானின் ஜூனியர்களாக அவரது வார்த்தைகளை அறிவுரைகளை எப்போதுமே நாங்கள் நினைவில் வைத்திருப்போம் என்றும் ஜாக்கி சான் தெரிவித்துள்ளார். மேலும் அவரது ஆன்மா சாந்தியடைய தான் பிரார்த்தனை செய்வதாகவும் தனது பதிவில் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X