பிகில் வில்லன் ஜாக்கி ஷெரஃப்புக்கு பிறந்தநாள்.. ஆரண்ய காண்டம் பட நடிப்பை எல்லாம் மறக்க முடியுமா?

சென்னை: பிகில் படத்தில் வில்லனாக நடித்து மிரட்டிய பிரபல பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராஃப் இன்று தனது 65வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

1982ம் ஆண்டு மிதுன் சக்கரவர்த்தி மற்றும் நசீருதின் ஷா நடிப்பில் உருவான சாமி தாதா படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் ஜாக்கி ஷெராஃப்.

தமிழில் ஆரண்ய காண்டம், கோச்சடையான், முப்பரிமானம், மாயவன், சாஹோ மற்றும் பிகில் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

65வது பிறந்தநாள்

65வது பிறந்தநாள்

பிரபல பாலிவுட் வில்லன் நடிகர் ஜாக்கி ஷெராஃப் இன்று தனது 65வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். 1957ம் ஆண்டு பிப்ரவரி 1ம் தேதி பிறந்தவர். ஜெய்கிஷான் கக்குபாய் ஷெராஃப் எனும் பெயரை சுருக்கி ஜாக்கி ஷெராஃப் என சினிமாவில் பயன்படுத்தி வருகிறார். இவரது மகன் டைகர் ஷெராஃப் பாலிவுட்டின் ஆக்‌ஷன் ஹீரோவாக அசத்தி வருகிறார்.

ரஜினிக்கு வில்லன்

ரஜினிக்கு வில்லன்

பாலிவுட் நடிகர்களுக்கு வில்லனாகவும் தந்தையாகவும் குணசித்ர கதாபாத்திரங்களிலும் நடித்துள்ள இவர் 1987ம் ஆண்டு வெளியான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் உத்தர் தக்‌ஷின் எனும் இந்தி படத்தில் அவருக்கு வில்லனாக நடித்துள்ளார். மாதுரி தீக்‌ஷித் அந்த படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். கோச்சடையான் படத்தில் அனிமேஷன் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் சமீபத்தில் வெளியான அக்‌ஷய் குமாரின் சூர்ய வன்ஷி படத்திலும் இவர் தான் மெயின் வில்லன்.

ஆரண்ய காண்டம் படத்தில் அசத்தல்

ஆரண்ய காண்டம் படத்தில் அசத்தல்

இயக்குநர் தியாகராஜன் குமரா ராஜா இயக்கத்தில் தேசிய விருதை தட்டித் தூக்கிய ராவான ஆரண்ய காண்டம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் வில்லனாக அறிமுகமானார் ஜாக்கி ஷெராஃப். இளம் பெண்ணுடன் உடல் உறவு கொள்ள முடியாத வயதான வில்லனாக இவரது இன்ட்ரோ சீனே இந்த படம் வித்தியாசமான படம் என்பதை நிரூபித்து இருக்கும்.

பிகில் வில்லன்

பிகில் வில்லன்

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், மராத்தி, பஞ்சாபி, குஜராத்தி, ஒடியா இந்தி என ஏகப்பட்ட இந்திய மொழிப் படங்களில் நடித்த இவர் டிவி தொடர்களிலும் நடித்துள்ளார். இயக்குநர் அட்லி இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான பிகில் படத்தில் வில்லனாக மெர்சல் காட்டியிருப்பார் ஜாக்கி ஷெர்ஃப். அதிலும், ராயப்பன் இவரை ஜட்டி ஓடு அடித்து அனுப்பும் காட்சியில் நடிப்பின் உச்சிக்கே சென்றிருப்பார் ஜாக்கி ஷெராஃப்.

ரெண்டகம்

ரெண்டகம்

குஞ்சாக்கோ போபன், அரவிந்த் சாமி நடிப்பில் விரைவில் வெளியாக உள்ள ரெண்டகம் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் நடிகர் ஜாக்கி ஷெராஃப். அவரது பிறந்தநாளை முன்னிட்டு ஸ்பெஷல் போஸ்டரை நடிகர் ஆர்யா வெளியிட்டுள்ளார். இயக்குநர் ஃபெலினி இயக்கத்தில் கேங்ஸ்டர் படமாக இந்த ரெண்டகம் உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X