பாலியல் வழக்கில் கைதான நடிகர்.. ரூ.20 லட்சம் செலவு செய்து வெளியில் எடுத்த புஷ்பா படக்குழு!

ஹைதராபாத்: புஷ்பா பட நடிகர் ஜெகதீஷ் பிரதாப் பண்டாரி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சிறையில் இருக்கும் நிலையில், புஷ்பா படக்குழு அவரை ஜாமீனில் எடுத்துள்ளது.

நடிகர் ஜெகதீஷ் பிரதாப் பண்டாரி துணை நடிகை ஒருவருடன், உறவில் சில காலம் வாழ்ந்து வந்துள்ளார். ஆனால், இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துவிட்டனர்.

இதனையடுத்து அந்த நடிகைக்கு வேறு ஒரு நபருடன் பழக்கம் ஏற்பட்டு அவருடன் நெருங்கி பழகி இருவரும் தனிமையில் இருந்ததை நடிகர் ஜெகதீஷ் பிரதாப் பண்டாரி வீடியோ எடுத்து அந்த துணை நடிகையை மிரட்டி உள்ளார்.

Actor Jagadeesh Pratap Bhandari bailed out Pushpa film team

ஜெகதீஷ் பிரதாப் பண்டாரி: இதனால் மனமுடைந்த அந்த துணை நடிகை, கடந்த 29ம் தேதி தனது வீட்டில் தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து பெண்ணின் தந்தை அளித்த புகாரின் பேரில், ஐதராபாத் போலீசார் 306 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை சிறையில் அடைத்தனர். தற்போது நீதிமன்ற காவலில் இருக்கும் ஜெகதீஷ் பிரதாப்பை புஷ்பா படக்குழு 20 லட்சம் ரூபாய் செலவு செய்து ஜாமீனில் வெளியில் எடுத்துள்ளது.

படப்பிடிப்பு: புஷ்பா 2 படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், அல்லு அர்ஜுன் மற்றும் ஜெகதீஷ் பிரதாப் பண்டாரி ஆகியோர் பங்குபெறும் காட்சிகள் படமாக்கப்பட்டு வந்த நிலையில், அவர் சிறை சென்றுவிட்டதால், படப்பிடிப்பு தாமதமானது. இவருக்கு பதிலாக இவரை போலவே முகபாவனையில் இருக்கும் ஒருவரை டூப் போட்டு மீதம் இருக்கும் காட்சியை படமாக்கி விடலாம் என படக்குழு திட்டமிட்டது.

ரூ.20 லட்சம்: அப்படி செய்தால், அது படத்தை ஒட்டு மொத்தமாக பாதித்துவிடும் என்பதாலும், படப்பிடிப்பிற்காக செலவு செய்த அனைத்து தொகையும் வீணாகிவிடும் என்பதாலும், புஷ்பா படக்குழு கிட்டத்தட்ட 20 லட்சம் ரூபாயை பிணைய தொகையாக கொடுத்து பிரதாப் பண்டரியை ஜாமினில் வெளியே எடுத்துள்ளது. இணையத்தில் இந்த தகவல் காட்டுத் தீ போல பரவியதை அடுத்து நெட்டிசன்கள் பலர் அடப்பாவிகளாக இப்படி எல்லாம் கூடவா பண்ணுவீங்க என்று கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X