இந்தியன் 2 புரமோஷனுக்கு என்னை கூப்டவே இல்லையே.. படத்துல நான் தான் மெயின் ரோல்.. ஜெகன் வருத்தம்!

சென்னை: கமல்ஹாசன், சித்தார்த்துக்கு அடுத்து இந்தியன் 2 படத்தில் நான் தான் மெயின் ரோல் என நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால், இந்தியன் 2 படக்குழுவினர் யாருமே என்னை கண்டுக் கொள்ளவே இல்லை என நடிகர் ஜெகன் புலம்பியுள்ளார். அயன் படத்தின் மூலம் அதிகம் பிரபலமான ஜெகனை ரசிகர்கள் நண்டு ஜெகன் என்றும் அழைப்பார்கள்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான கிங் குயின் ஜாக் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய ஜெகன் கடவுள் பாதி மிருகம் பாதி நிகழ்ச்சி மூலம் அதிகம் பாப்புலரானார். விஜய் டிவியில் சிவகார்த்திகேயனுக்கே சீனியரான ஜெகன் சினிமாவில் பல ஆண்டுகள் நடித்து வந்தாலும், இன்னமும் தனக்கான அங்கீகாரமே கிடைக்கவில்லை என்று புலம்பியுள்ளார்.

Indian 2 jagan Kamal Haasan Shankar

இந்தியன் 2 படத்தில் தன்னுடைய ரோல் முக்கியமான ரோல் என்றும் ஷங்கர் சார் எனக்காக பார்த்து கொடுத்திருக்கிறார். அதற்கு மறைந்த என் குருநாதர் கே.வி. ஆனந்த் சாருக்குத்தான் நன்றி தெரிவிப்பேன் என்றார்.

அயன் தான் அடையாளம்: 2005ம் ஆண்டு பிரசன்னா, லைலா மற்றும் கார்த்திக் குமார் நடித்த கண்ட நாள் முதல் படத்தில் ஃபிரெண்ட் கேரக்டரில் நடித்து சினிமாவில் அறிமுகமானார் ஜெகன். ஒரு பக்கம் சினிமாவிலும், இன்னொரு பக்கம் விஜய் டிவியில் ஹோஸ்ட்டாகவும் கலக்கி வந்தார். பொன்னியின் செல்வன், சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி, இதயத் திருடன், வல்லவன், ஓரம்போ, பொறி என பல படங்களில் நடித்து வந்த ஜெகனுக்கு 2009ம் ஆண்டு வெளியான சூர்யா நடித்த அயன் திரைப்படம் தான் இன்று வரை அடையாளமாகவே உள்ளதாக அவர் புலம்பியுள்ளார். அதன் பின்னர் எத்தனையோ படங்களில் சிறப்பான கதாபாத்திரங்களில் நடித்தும் இன்றைக்கும் அயன் ஜெகன் என்று தான் மக்களுக்கு தெரிகிறது என்றார்.

20 வருட சினிமா வாழ்க்கை: அயன் படத்தைத் தொடர்ந்து பையா, கோ, அம்புலி, வத்திக்குச்சி, மரியான், என்றென்றும் புன்னகை, நான் சிகப்பு மனிதன், இரும்பு குதிரை, இந்தியா பாகிஸ்தான், அனேகன், கவன், ஜாக்பாட், ராக்கெட்ரி, பல்லு படாம பாத்துக்கோ, கோஸ்டி, இடி மின்னல் காதல் என பல படங்களில் நடித்துள்ளார். 20 ஆண்டுகளாக சினிமா மற்றும் சின்னத்திரையில் பணியாற்றி வந்தாலும் தனக்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை என வருத்தத்துடன் பேசியுள்ளார் ஜெகன்.

இந்தியன் 2 புரமோஷனுக்கே கூப்பிடல: இந்தியன் 2 படத்தில் கமல்ஹாசன், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர், விவேக் இவ்ளோ தான் நடிகர்கள் பெயராவே சொல்றாங்க, என்னை யாருமே கண்டுக்கல. அந்த படத்தின் புரொட்யூசருக்கே நான் நடிச்சிருக்கிறது தெரியல. படத்தில் நான் தான் மெயின் ரோல் பண்ணியிருக்கேன்னு நான் மட்டும் தான் நினைச்சிட்டு இருக்கேன். கமல் சாரோட தீவிர பக்தன் நான், அவரு சிவன் என்றால் நான் கண்ணப்பன். என் கண்களை பிடுங்கிக் கூட அவருக்கு வைப்பேன். இந்த படத்தில் அவர் சிவதாண்டவம் ஆடியிருக்காரு, நிச்சயம் படம் வேறலெவலில் ஹிட் அடிக்கும் என தனது வலியையும் வேதனையையும் தாண்டி இந்தியன் 2 படத்துக்கான புரமோஷனையும் ஜெகன் செய்துள்ளார்.

லோகேஷ் கண்டுக்கல: இயக்குநர் லோகேஷ் கனகராஜை ஒருமுறை சந்தித்தேன். நானும் நடிகர் தான்னு சொன்னேன். அண்ணே கண்டிப்பா கூப்பிடுறேன்னு சொன்னாரு, ஆனால், இதுவரை ஒரு முறை கூட கூப்பிடவில்லை என்றும் சினிமாவில் தன்னை பலரும் அப்படியே ஒதுக்கி விட்டார்கள் என்றும் கே.வி. ஆனந்த் சார் என்னை பற்றி சொன்னதால் தான் ஷங்கர் சார் எனக்கு இந்த படத்தில் வாய்ப்புக் கொடுத்தார் என்றும் ஜெகன் பேசியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X