400 படங்களுக்கு மேல் நடித்த.. பிரபல பாலிவுட் காமெடி நடிகர் திடீர் மரணம்.. திரையுலகம் இரங்கல்!

By

மும்பை: பிரபல இந்தி காமெடி நடிகர் திடீரென மரணமடைந்திருப்பது திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

பாலிவுட்டில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து மரணங்கள் நிகழ்ந்து வருகின்றன. இளம் நடிகர்கள் முதல் மூத்த நடிகர்கள் வரை தொடந்து மரணத்தைத் தழுவி வருகின்றனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன், பிரபல நடிகர் இர்பான் கான் திடீரென மரணமடைந்தார். அவர் மரணமடைந்த அடுத்த நாளே மூத்த நடிகர் ரிஷி கபூர் மரணமடைந்தார்.

சுஷாந்த் சிங் தற்கொலை

சுஷாந்த் சிங் தற்கொலை

இந்நிலையில் பிரபல இளம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்துகொண்டார். இது பாலிவுட்டில் மட்டும் அல்லாமல், இந்தியா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. மன அழுத்தம் காரணமாக அவர் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது. அவரது தற்கொலை தொடர்பாக மும்பை பாந்த்ரா போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 காமெடி நடிகர் ஜக்தீப்

காமெடி நடிகர் ஜக்தீப்

இதற்கிடையே சில சின்னத்திரை நடிகர்களும் உயிரிழந்தனர். இந்நிலையில் பிரபல காமெடி நடிகர் ஜக்தீப் நேற்று இரவு தனது வீட்டில் மரணமடைந்தார். அவருக்கு வயது 81. சுமார் 400 -க்கும் மேற்பட்ட படங்களில் இவர் நடித்துள்ளார். ஷோலே படத்தில் இவரது காமெடி ரசிகர்களிடையே அப்போது பரபரப்பாகப் பேசப்பட்டது. குழந்தை நட்சத்திரமாக நடிக்கத் தொடங்கிய ஜக்தீபை, இளம் நடிகராக அறிமுகப்படுத்தியது ஏவிஎம் நிறுவனம்.

பிரம்மச்சாரி

பிரம்மச்சாரி

இந்த நிறுவனம் இந்தியில் தயாரித்த பாபி, பர்கா, பிந்தயா ஆகிய படங்களில் முக்கிய வேடங்களில் நடித்தார். ரமேஷ் சிப்பி இயக்கிய பிரம்மச்சாரி என்ற படம் மூலம் காமெடியனாக ஆனார். தொடர்ந்து காமெடி கேரக்டர்களில் நடித்து வந்தார். நேற்று இரவு தனது வீட்டில் மரணமடைந்தார். மறைந்த ஜக்தீபுக்கு நடிகர் ஜாவித் ஜாஃபரி உட்பட 6 பிள்ளைகள் உள்ளனர்.

அஜய்தேவ்கன்

அஜய்தேவ்கன்

இந்தி திரையுலகினர் அவர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நடிகர் அஜய்தேவ்கன் ட்விட்டரில் வெளியிட்டுள்ள இரங்கலில், 'இந்த சோகச் செய்தியை கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். அவரை திரையில் பார்த்து எப்போதும் மகிழ்ச்சி அடைவேன். ரசிகர்களுக்கு எப்போதும் சிரிப்பை அளித்தவர். மகிழ்ச்சியை அளித்தவர். அவர் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்' என்று கூறியுள்ளார்.

நடிகர் ஜானி லீவர்

நடிகர் ஜானி லீவர்

பிரபல பாலிவுட் காமெடி நடிகர் ஜானி லீவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், எனது முதல் படமும் முதன்முதலாக கேமராவை எதிர்கொண்டதும் இவருடன் தான். உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும் என்று கூறியுள்ளார். பாலிவுட் நடிகர், நடிகைகள், தயாரிப்பாளர்கள் மற்றும் ரசிகர்கள் அவர் மறைவுக்கு சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Read more about: jagdeep ஜக்தீப்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X