அட்லீயின் புதிய படத்தில் வில்லன் அவதாரம் எடுக்கும் பிரபல ஹீரோ.. தீயாய் பரவும் தகவல்!
சென்னை: இயக்குநர் அட்லீயுடன் மீண்டும் கைகோர்க்கும் பிரபல ஹீரோ அவர் தயாரிக்கும் படத்தில் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.
தமிழ் சினிமாவில் ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் அட்லீ. தொடர்ந்து நடிகர் விஜய்யுடன் கூட்டணி அமைத்தார் அட்லீ.
அடுத்தடுத்து தெறி, மெர்சல், பிகில் என மூன்று ஹாட்ரிக் படங்களை கொடுத்து முன்னணி இயக்குநராக உயர்ந்தார். பாலிவுட் நடிகரான ஷாருக்கானையும் இயக்கவுள்ளார் அட்லீ.

தயாரிப்பாளர் அட்லீ
மேலும் இயக்குநராக மட்டுமின்றி தயாரிப்பாளராகவும் வலம் வருகிறார். இவர்கள் தயாரிப்பில் சங்கிலி புங்கிலி கதவ தொற, அந்தகாரம் போன்ற படங்கள் வெளியானது.

வில்லனாக நடிக்கும் ஜெய்
இந்நிலையில், இயக்குனர் அட்லீ அடுத்ததாக தயாரிக்கும் புதிய படத்தில் நடிகர் ஜெய் வில்லனாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அட்லீயிடம் உதவி இயக்குனர் இப்படத்தை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.

மீண்டும் கூட்டணி
ஏற்கனவே அட்லீயுடன் ராஜா ராணி படத்தில் பணியாற்றிய ஜெய், தற்போது அவருடன் மீண்டும் இணைய உள்ளார். நடிகர் ஜெய், தற்போது பிரேக்கிங் நியூஸ், எண்ணி துணிக மற்றும் குற்றமே குற்றம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

கலவையான விமர்சனங்கள்
கடைசியாக அவரது நடிப்பில் கேப்மாரி திரைப்படம் வெளியானது. இந்தப் படம் கலவையான விமர்சனங்களை பெற்றது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











