அரபிக் குத்து பாட்டுக்கு சூப்பர் ஆட்டம் போட்ட அடுத்த பிரபலங்கள்

சென்னை : நடிகர் விஜய் நடிப்பில் பீஸ்ட் படம் உருவாகியுள்ளது. சமீபத்தில் படத்தின் முதல் பாடல் வெளியானது.

அனிருத் இசையில் சிவகார்த்திகேயன் பாடல் வரிகளில் வெளியான இந்தப் பாடல் தற்போது யூடியூபில் 74 மில்லியன் வியூஸ்களை கடந்துள்ளது.

இந்தப் பாடலால் அதிகமான பிரபலங்கள் ஈர்க்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் மற்றொரு பிரபல ஜோடியும் இணைந்துள்ளது.

நடிகர் விஜய்யின் பீஸ்ட்

நடிகர் விஜய்யின் பீஸ்ட்

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் பீஸ்ட். இந்தப் படம் வரும் ஏப்ரலில் தமிழ்ப் புத்தாண்டையொட்டியும் கோடைக் கொண்டாட்டமாகவும் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் சூட்டிங் நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.

அப்டேட் கேட்ட ரசிகர்கள்

அப்டேட் கேட்ட ரசிகர்கள்

இதனிடையே படத்தின் பிரமோஷனையும் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் சிறப்பான வகையில் துவங்கியுள்ளது. படத்தின் சூட்டிங் துவங்கியது முதல் படத்திற்கான அடுத்தடுத்த அப்டேட்களை ரசிகர்கள் தொடர்ந்து கேட்டு வருகின்றனர். படத்தின் 100வது நாளையொட்டி இயக்குநர் நெல்சன் சிறப்பு போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டிருந்தார்.

சிறப்பு போஸ்டர்

சிறப்பு போஸ்டர்

இந்த போஸ்டரில் விஜய் டிரம்ஸ் வாசித்தபடியும் மற்றவர்கள் மற்ற இசைக்கருவிகளை வாசித்தபடியும் இருந்தனர். இந்தப் புகைப்படம் வைரலான நிலையில், தொடர்ந்து விஜய் ரசிகர்கள் அப்டேட் கேட்டு படத்தை ட்ரெண்டிங்கிலேயே வைத்திருந்தனர். இதையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்பு படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது.

பாடலின் ப்ரோமோ

பாடலின் ப்ரோமோ

முன்னதாக இந்தப் பாடலுக்கான பிரமோவும் வெளியாகி பட்டையை கிளப்பியது. இந்தப் பாடலுக்கு அரபிக்குத்து என்று பெயரிட்டிருந்தார் படத்தின் இசையமைப்பாளர் அனிருத். சிவகார்த்திகேயன் வரிகளில் இந்தப் பாடல் உருவாகியிருந்தது. இந்நிலையில் தற்போது இந்தப் பாடல் இணையத்தை அலற விட்டுக் கொண்டுள்ளது.

74 மில்லியன் வியூஸ்

74 மில்லியன் வியூஸ்

தற்போது இந்தப் பாடல் யூடியூபில் 74 மில்லியன் வியூஸ்களை கடந்துள்ளது. மேலும் 3.3 மில்லியன் லைக்ஸ்களையும் அள்ளியுள்ளது. இந்நிலையில் இந்தப் பாடல் ரசிகர்களை மட்டுமின்றி பிரபலங்களையும் அதிகமாக கவர்ந்துள்ளது. இந்தப் பாடலுக்கு நடனமாடி பலர் சமூக வலைதளங்களில் வீடியோக்களை பகிர்ந்து வருகின்றனர்.

ஜெய், அமிர்தா ஆட்டம்

ஜெய், அமிர்தா ஆட்டம்

அந்த வகையில் நடிகர் ஜெய் மற்றும் நடிகை அமிர்தா ஐயர் இருவரும் இணைந்து இந்தப் பாடலுக்கு நடனமாடியுள்ளனர். இந்த வீடியோவை அமிர்தா தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். சூட்டிங் இடைவேளையில் இந்த அரபிக்குத்து சேலஞ்சை எடுத்து இருவரும் நடனமாடியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஷிவாங்கி நடனம்

ஷிவாங்கி நடனம்

இதனிடையே குக் வித் கோமாளி புகழ் சிவாங்கியும் அரபிக்குத்து பாடலுக்கு நடனமாடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார். அவர் சமூக வலைதளங்களில் சிறப்பாக செயல்பட்டுவரும் நிலையில், இந்தப் பாடலுக்கு அவர் ஆடியுள்ளதன்மூலம் தனக்கு பாட மட்டுமின்றி ஆடவும் வரும் என்பதை நிரூபித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X