விஜய் என பேரை மாற்றிக் கொண்ட ஜெய்.. எல்லாம் லவ் மேட்டருக்காகத் தான்.. எஸ்.ஏ.சி.யும் ஓகே சொல்லிட்டாரு
லவ் மேட்டர் படத்தில் தனது கேரக்டர் பெயரை விஜய் என மாற்றி வைத்துள்ளார் நடிகர் ஜெய்.
சென்னை: லவ் மேட்டர் படத்தில் தனது கதாபாத்திரப் பெயரை விஜய் என மாற்றிக்கொண்டுள்ளார் நடிகர் ஜெய்.
விஜய்யின் பகவதி படத்தில் அவரது தம்பியாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் ஜெய். அப்போது முதலே விஜய்யுடன் நல்ல உறவில் இருக்கிறார்.
சென்னை 28 படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார். அதைத்தொடர்ந்து, எங்கேயும் எப்போதும், ராஜா ராணி உள்ளிட்ட நிறைய படங்களில் நடித்து, தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை உருவாக்கி வைத்துள்ளார். ஜெய் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் நீயா 2. இப்படம் அவருக்கு எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை.

லவ் மேட்டர்ஸ்:
இந்நிலையில், எஸ்.ஏ.சந்திரசேகர் சிறிய இடைவெளிக்குப் பிறகு இயக்கும் புதிய படத்தில் நாயகனாகி இருக்கிறார் ஜெய். லவ் மேட்டர்ஸ் எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில், வைபவி, அதுல்யா என இரண்டு நாயகிகள்.

25வது படம்:
எஸ்.ஏ.சந்திரசேகருக்கு 70வது படமாக உருவாக இருக்கும் இப்படம், ஜெய்க்கு 25வது படம் ஆகும். எனவே, இப்படம் வெற்றியடைய வேண்டும் என தீவிரமாக உழைத்து வருகிறார் ஜெய். இளம் தலைமுறைக்கு பிடித்த வகையில் இப்படம் உருவாகி வருவதாகக் கூறப்படுகிறது.

விஜய்:
இப்படத்தில் ஜெய்யின் கதாபாத்திரத்திற்கு முதலில் கார்த்திக் என எஸ்.ஏ.சந்திரசேகர் பெயர் வைத்திருந்தார். ஆனால், ஜெய் அப்பெயரை மாற்றி, விஜய் என மாற்றச் சொல்லி கேட்டுக் கொண்டாராம். ஜெய்யின் விருப்பத்திற்கு ஏற்ப நாயகன் பெயரை விஜய் என எஸ்.ஏ.சி.யும் மாற்றி விட்டாராம்.

செண்டிமெண்ட்:
பெரும்பாலும் தனது தந்தையான எஸ்.ஏ.சி இயக்கத்தில் விஜய் நடித்த படங்களில் அவரது கதாபாத்திரப் பெயர் விஜய் என்று தான் இருக்கும். எனவே, அந்த செண்டிமெண்டில் தான் இப்படத்திலும் தனது பெயரை விஜய் என மாற்றிக் கொண்டுள்ளார் ஜெய் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











