Jai Interview: நயன்தாராகிட்ட பேசினாதான் ஆடியன்ஸ் எல்லார்கிட்டயும் போய் சேரும்.. ஜெய் க்யூட் பேச்சு!
சென்னை: நடிகர் ஜெய் தேர்ந்தெடுத்தப் படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் நயன்தாரா ஜோடியாக அன்னபூரணி படத்தில் அவர் நடித்துள்ள கேரக்டர் ரசிகர்களை கவர்ந்துள்ளது.
இந்தப் படத்தில் ஃபர்ஹானா என்ற முஸ்லிம் இளைஞராக நடித்துள்ளார் ஜெய். அன்னபூரணியின் முயற்சிகளுக்கு துணை நிற்கும் கேரக்டரில் ஜெய் நடித்துள்ளார்.
இந்தப் படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நிலையில் தற்போது படத்தின் ரிலீசை தொடர்ந்து நயன்தாராவுடன் இணைந்து படத்திற்கான பிரமோஷன்களில் ஜெய் ஈடுபட்டு வருகிறார்.

நடிகர் ஜெய்: சென்னை 28 படம் மூலம் கவனம் பெற்றவர் நடிகர் ஜெய். இவருக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்றுத் தந்தப்படம் ராஜா ராணி. இந்தப் படத்தில் நடிகை நயன்தாராவின் காதலராக நடித்திருந்தார் ஜெய். இந்தப் படத்தை அட்லீ இயக்கியிருந்த நிலையில் படம் ஜெய் நடிப்பில் வெளியான எவர்கிரீன் பேவரிட் படமாக அமைந்தது. இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். இருந்தபோதிலும் அடுத்தடுத்த தோல்விப் படங்களே ஜெய்க்கு அமைந்து வருகிறது.
அன்னபூரணி படம்: இந்நிலையில் தற்போது நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள அன்னபூரணி படத்தில் அவருக்கு ஜோடி சேர்ந்துள்ளார். படத்தில் ஃபர்ஹானா என்ற கேரக்டரில் நடித்துள்ளார் ஜெய். தன்னுடைய கனவை துரத்தும் நயன்தாராவின் கேரக்டருக்கு துணை நிற்கும் இளைஞனாக ஜெய் இந்தப் படத்தில் நடித்துள்ளார். இந்தப்படம் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுத் தந்துள்ளது. படம் நல்ல விமர்சனங்களை பெற்ற போதிலும் படத்திற்கான பிரமோஷன்கள் சிறப்பாக மேற்கொள்ளப்படவில்லை என்று கூறப்பட்டது.
பிரமோஷன்களில் ஜெய்: இந்நிலையில் படம் ரிலீசாகி சில தினங்கள் கழித்து படத்தின் பிரமோஷன்களில் தற்போது ஜெய் ஈடுபட்டுள்ளார். நயன்தாராவை போலவே தான் நடிக்கும் படங்களின் பிரமோஷன்களில் ஈடுபடுவதில்லை என்ற கொள்கையை மெயின்டெயின் செய்துவந்தார் ஜெய். இந்நிலையில் தற்போது அன்னபூரணி படத்தின் பிரமோஷன்களில் இருவரும் ஈடுபட்டுவருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு நயன்தாராவுடன் இணைந்து கல்லூரி மாணவர்களுக்கு பிரியாணி பரிமாறினார்.
நயன்தாரா குறித்து பாராட்டு: இந்நிலையில் தற்போது அன்னபூரணி படத்திற்காக பேட்டிகளையும் கொடுத்து வருகிறார். ராஜா ராணி படம் குறித்தும் அவர் மனம் திறந்துள்ளார். ராஜா ராணியில் நயன்தாராவுடனான காம்பினேஷன் காட்சிகள் 20 நிமிடங்கள்தான் என்பதை சுட்டிக் காட்டினார். தாங்கள் இருவரும் இணைந்து லவ் சீனில் நடிக்க வேண்டும் என்பதில்லை. இருவரும் இணைந்து பேசினாலே அது லவ்வபள் ஆக ரசிகர்கள் கொண்டாடுவதாகவும் அவர் சுட்டிக் காட்டினார்.
ஷாக் கொடுக்கும் நயன்தாரா: நயன்தாரா குறித்து பேசிய ஜெய், தன்னுடைய மனதில் என்ன இருக்கிறதோ அதை அப்படியே செய்வார் என்றும் சமயத்தில் தான் அவரது நடிப்பை பார்த்து ஷாக் ஆகியுள்ளதாகவும் கூறியுள்ளார். அன்னபூரணி படத்தில் பெண்களை சப்போர்ட் செய்வது போன்ற கேரக்டர் தன்னுடையது என்று குறிப்பிட்டுள்ள ஜெய், இந்தப் படத்தை மிஸ் செய்திருந்தால் அதுபோன்ற கேரக்டர் தனக்கு கிடைத்திருக்காது என்று கூறினார். மேலும் நயன்தாராவிடம் பேசினால்தான் அது ஆடியன்ஸ் அனைவருக்கும் சென்று சேரும் என்றும் குறிப்பிட்டார்


Click it and Unblock the Notifications











