For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  சைக்கோ கொலைகாரனாக ஜெய்...காவல் அதிகாரியாக சுந்தர் சி...80 களில் நடக்கும் கதை

  |

  சென்னை: பத்ரி இயக்கத்தில் சுந்தர் சி கதாநாயகனாக நடிக்கும் பட்டாம்பூச்சி திரைப்படத்தின் மிரட்டலான ப்ரமோ பாடல் சமீபத்தில் யூடியூப்பில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பினைப் பெற்று வருகின்றது.

  ஏற்கனவே படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும், முன்னோட்டமும் இப்படம் குறித்த எதிர்பார்ப்பினை அதிகரித்திருந்த நிலையில், தற்போது வெளியாகியிருக்கும் ப்ரமோ பாடலும், அதன் வரிகளும் கேட்பவரின் நெஞ்சை உறையவைக்கும் வகையில் மிரட்டலாக அமைந்துள்ளது.

   பெரிய டைரக்டர் படத்தில் வில்லன்,4 மணி நேரத்தில் ஜெய்பூர் ஷூட்டிங், விதார்த் சிறப்பு பேட்டி பெரிய டைரக்டர் படத்தில் வில்லன்,4 மணி நேரத்தில் ஜெய்பூர் ஷூட்டிங், விதார்த் சிறப்பு பேட்டி

  இயக்குனர் பத்ரி ஒரு மிக சிறந்த வசனகர்த்தா என்று தமிழ் சினிமா வட்டாரங்களில் அனைவரும் அறிந்ததே. பல சுந்தர் சி படங்களுக்கு வசனங்களை எழுதியவர்,பல ஹிட் சீரியல்களை டைரக்ட் செய்தவர் என்பது குறிப்பிட தக்கது.

   சைக்கோ வில்லனாக மாறும் ஜெய்

  சைக்கோ வில்லனாக மாறும் ஜெய்

  இன்வெஸ்டிகேசன் திரில்லர் பாணியில் உருவாகியிருக்கும் இத்திரைப்படத்தில் நடிகர் ஜெய் சைக்கோ கொலைகாரனாக நடிக்கிறார். காவல்துறை அதிகாரியான சுந்தர் சி-க்கும், சைக்கோ கொலைகாரனான ஜெய்க்கும் இடையே நடக்கும் எலி, பூனை விளையாட்டே விறுவிறுப்பான கதைக்களம் எனக் கூறப்படுகின்றது. குழந்தை முகம், அமைதியான பார்வை, அப்பாவியான பேச்சு என தனக்கென ஒரு தனிப் பாணியில் நடித்துக் கொண்டிருந்த நடிகர் ஜெய்க்கு அண்மையில் வெளிவந்த சில படங்கள் ரசிகர்களிடையே அவ்வளவு வரவேற்பினைப் பெற்றுத் தரவில்லை.

   முறையாக வில்லனாக

  முறையாக வில்லனாக

  இதனால் தனது வழக்கமான பாணியை மாற்றி ஒரு வித்தியாசத்தைக் காட்டும் வகையில் முதன் முறையாக வில்லனாகக் களமிறங்குகிறார் ஜெய். அதே போல், தனக்கேற்ற வகையில் கதாப்பாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து ஒரு நடிகராகவும் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த சுந்தர் சியுடன் இணைவதால் சுந்தர் சி-ஜெய் கூட்டணி ரசிக்க வைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. பாடலின் இசையும், அதன் வரிகளும் படத்தில் இடம்பெறப்போகும் சுவாரஸ்யத்தை விவரிக்கும் விதமாக அமைந்திருக்கிறது. குறிப்பாக ஜெய்யின் கதாப்பாத்திரம் குறித்து பல ஹிண்ட்களை பட்டாம்பூச்சி பாடல் வரிகள் கொடுத்திருக்கிறது.

   80'ஸ் சப்ஜெக்ட் ஜெய்க்கு மீண்டும் கைகொடுக்குமா?

  80'ஸ் சப்ஜெக்ட் ஜெய்க்கு மீண்டும் கைகொடுக்குமா?

  பட்டாம்பூச்சி திரைப்படத்தின் கதை 1980 களில் நடக்கும் திரில்லர் கதை என்று கூறப்படுகின்றது. ஏற்கனவே கடந்த 2008-ம் ஆண்டு வெளிவந்த சுப்பிரமணியபுரம் என்ற திரைப்படத்தில் 1980களில் நடக்கும் கதையாக காட்டப்பட்டு அதில் ஜெய் கதாநாயகனாக நடித்திருந்தார். அத்திரைப்படம் பட்டி தொட்டி எங்கும் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. அந்த வகையில் பட்டாம்பூச்சி திரைப்படமும் 80-களில் நடக்கும் கதை என்பதால் ஜெய்க்கு அந்த சூப்பர் ஹிட் ராசி கைகொடுக்குமா? என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

   மே ரிலீஸ்

  மே ரிலீஸ்

  அவ்னி டெலி மீடியா சார்பில் நடிகை குஷ்பு தயாரித்திருக்கும் இத்திரைப்படத்தில் ஹனி ரோஸ், இமான் அண்ணாச்சி ஆகியோர் முக்கியக் கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இத்திரைப்படம் மே மாத இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.சுந்தர் சி பல விதமான புதிய முயற்சிகளை தொடர்ந்து எடுத்து வருகிறார் .அவரது பல படங்கள் வசூல் பெறவில்லை என்று சிலர் சொன்னாலும்,அதை சரியான வியாபார யுக்திகளை கையாண்டு தனது எல்லா படங்களையும் சாட்டிலைட் ரைட்ஸ்,ஓடிடி ரைட்ஸ் என்று பக்கா பிளான் செய்து வெற்றி பெற்று வருகிறார். இந்த படமும் அவருக்கு வெற்றியை பெற்று தருமா என்பதை பொறுத்து இருந்து பார்ப்போம்.

  English summary
  Actor jai is acting in a negative role for the first time in the movie "Pattampoochi "and sundar.c plays the lead. An encaging thriller is been planned by director bathri and the movie is planned to release next month
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X