விண்ணைத் தாண்டி வருவாயா ஹீரோ கேரக்டரை மிஸ் செய்த நடிகர்.. இப்போ வருத்தப்பட்டு என்னவாகப் போகுது!

சென்னை : விஜய்யின் தம்பியாக அறிமுகமான நடிகர் ஜெய் தொடர்ந்து சென்னை 28, சுப்ரமணியபுரம் படங்களின்மூலம் தன்னை ஹீரோவாக நிலைநிறுத்திக் கொண்டார்.

தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். தற்போது பட்டாம்பூச்சி படத்தில் சைக்கோ வில்லனாக நடித்துள்ளார்.

இந்தப் படத்தின் பிரமோஷனுக்காக பேசிய ஜெய், தான் ஹீரோவாக நடிக்க கிடைத்த சான்சை மிஸ் செய்த சிறப்பான படங்கள் குறித்து வருத்தத்தை பதிவு செய்துள்ளார்.

விண்ணைத் தாண்டி வருவாயா படம்

விண்ணைத் தாண்டி வருவாயா படம்

நடிகர் சிம்பு, த்ரிஷா நடிப்பில் வெளியாகி சிறப்பான விமர்சனங்களையும் வசூலையும் பெற்றது விண்ணைத் தாண்டி வருவாயா. கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான இந்தப் படம் எவர்கிரீன் காதல் படங்களின் வரிசையில் இடம் பெற்றது. படத்தில் ஒவ்வொரு காட்சியிலும் காதலை சிறப்பாக காட்டியிருப்பார் கௌதம் மேனன்.

சிம்பு -த்ரிஷா கெமிஸ்ட்ரி

சிம்பு -த்ரிஷா கெமிஸ்ட்ரி

சிம்பு -த்ரிஷா கெமிஸ்ட்ரி இந்தப் படத்தில் சிறப்பாக பேசப்பட்டது. மேலும் இருவரும் சேர முடியாவிட்டாலும் காதலின் வலியை தத்ரூபமாக வெளிப்படுத்தியிருப்பார்கள். மனதை உலுக்கும் வகையில் இதன் க்ளைமாக்ஸ் காட்சி அனைவரையும் அதிகமாக கவர்ந்தது. சிம்பு கேரியரில் தி பெஸ்ட் படமாக இந்தப் படம் அமைந்தது.

இளமையான சிம்பு

இளமையான சிம்பு

குறிப்பாக சிம்பு இந்தப் படத்தில் அவ்வளவு அழகாகவும் இளமையாகவும் காட்டப்பட்டிருப்பார். காதலராகவும் இயக்குநராகவும் இவர் காட்டிய வித்தியாசம் ரசிகர்களை இப்போது பார்த்தாலும் படத்தை ப்ரெஷ்ஷாக உணர வைக்கும். அந்த வகையில் இந்தப் படம் ரசிகர்களின் விருப்பத்திற்குரிய படங்களில் ஒன்றாக தற்போதுவரை காணப்படுகிறது.

சான்சை தவறவிட்ட ஜெய்

சான்சை தவறவிட்ட ஜெய்

இந்நிலையில் இந்தப் படத்தில் நடிக்க கிடைத்த சான்சை தான் மிஸ் செய்தததாக நடிகர் ஜெய் தற்போது ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது வருத்தத்தையும் பதிவு செய்துள்ளார். சுப்ரமணியபுரம் படத்தின் வெற்றியை தொடர்ந்து கிடைத்த இந்தப் படத்தைதான் அவர் மிஸ் செய்துள்ளார். இந்தப் படத்தில் தான் நடிக்க நோ சொன்னதையடுத்தே நடிகர் சிம்புவிற்கு அந்த வாய்ப்பு கிடைத்ததாகவும் ஜெய் கூறியுள்ளார்.

வில்லனாக நடிக்கும் பட்டாம்பூச்சி

வில்லனாக நடிக்கும் பட்டாம்பூச்சி

இதேபோல சிவா மனசுல சக்தி, ராட்சசன், நாடோடிகள் போன்ற படங்களில் நடிக்க கிடைத்த வாய்ப்புகளையும் தான் மிஸ் செய்துள்ளதாக அவர் கூறியுள்ளார். வரும் 24ம் தேதி ஜெய் மற்றும் சுந்தர் சி இணைந்து மிரட்டியுள்ள சைக்கோ த்ரில்லர் படம் ரிலீசாக உள்ளது. இந்தப் படத்தில் சைக்கோவாக ஜெய் நடித்துள்ளார்.

தவறவிட்ட ராட்சசன் படம்

தவறவிட்ட ராட்சசன் படம்

இந்நிலையில் இந்தப் படத்தின் பிரமோஷன்களையொட்டி சமீபத்தில் அளித்த பேட்டியில்தான் தான் சில தவிர்க்க முடியாத காரணங்களால் விண்ணைத் தாண்டி வருவாயா, சிவா மனசுல சக்தி, நாடோடிகள் மற்றும் ராட்சசன் போன்ற படங்களில் நடிக்க கிடைத்த வாய்ப்புகளை தவற விட்டதை வருத்தத்துடன் பதிவு செய்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X