அஜித் தான் அந்த கேரக்டரில் நடிக்க சொன்னாரு.. அந்த கேரக்டர் என்னோட கேரியர் பெஸ்ட்டா அமைந்தது!
சென்னை : நடிகர் அஜித் தற்போது ஹெச் வினோத் இயக்கத்தில் ஏகே61 படத்தில் நடித்து வருகிறார்.
Recommended Video
இந்த சூட்டிங்கில் இருந்து சிறிது இடைவெளி எடுத்துக் கொண்ட அவர் தற்போது ஐரோப்பாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
தன்னை சூழ்ந்தவர்களுக்கு மற்றவர்களுக்கு தெரியாமல் உதவிகளை செய்து வருபவர் அஜித்.

நடிகர் அஜித்
நடிகர் அஜித் தற்போது ஏகே61 படத்திற்காக ஹெச் வினோத்துடன் இணைந்துள்ளார். இந்தப் படத்தை போனி கபூர் தயாரித்து வருகிறார். இந்தக் கூட்டணி நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களை தொடர்ந்து 3வது முறையாக இணைந்துள்ளது. இந்தப் படத்தின் செட் பிரம்மாண்டமான அளவில் ஐதராபாத்தில் போடப்பட்டு சூட்டிங் நடத்தப்பட்டது.

ஏகே 61 படம்
வலிமை படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில், தற்போது ஏகே 61 படத்தை ரசிகர்களை கவரும் வகையில் சிறப்பாக கொடுக்க வேண்டிய கட்டாயம் வினோத்திற்கு ஏற்பட்டுள்ளது. இதற்கு ஏற்ப பேங்க் கொள்ளையை மையமாக கொண்டு இந்தப்படம் உருவாகி வருவதாக கூறப்படுகிறது.

இரட்டை வேடங்களில் அஜித்
இந்தப் படத்தில் அஜித் இரட்டை வேடங்களில் நடித்து வருவதாக கூறப்படுகிறது. இதில் வில்லனும் அவரே, ஹீரோவும் அவரே என்றும் தகவல்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக உற்சாகப்படுத்தியது. அஜித்தின் ஒரு கெட்டப் வெளியிடப்பட்டு ரசிகர்களை வெகுவாக ஈர்த்தது.

பிரம்மாண்டமான செட்
இந்நிலையில் ஐதராபாத்தில் இந்தப் படத்தின் சூட்டிங் இடைவெளி இல்லாமல் தொடர்ந்து நடத்தப்பட்டது. பேங்க் மற்றும் மவுண்ட் ரோட் செட் பிரம்மாண்டமான அளவில் போடப்பட்டு இந்த சூட்டிங் நடந்தது. படத்தில் அஜித்தின் ஜோடியாக மஞ்சு வாரியர் இணைந்துள்ளார். அசுரன் படத்திற்கு பிறகு அவர் நடித்துள்ள படம் இது.

வெளியாகாத டைட்டில்
இந்தப் படத்தின் அடுத்தடுத்த அப்டேட்களை போனிகபூர் உள்ளிட்ட படக்குழுவினரை அஜித் ரசிகர்களை தொடர்ந்து கேட்டு வருகின்றனர். படத்தின் சூட்டிங்கை முடித்துவிட்டே படத்தின் டைட்டில் உள்ளிட்ட அப்டேட்களை வெளியிட போனிகபூர் திட்டமிட்டுள்ளாராம். படம் முன்னதாக தீபாவளிக்கு ரிலீசாக உள்ளதாக கூறப்பட்ட நிலையில் தற்போது டிசம்பர் வெளியீடு என்று கூறப்பட்டுள்ளது.

ஐரோப்பாவில் அஜித்
தற்போது சூட்டிங்கிலிருந்து சிறிது இடைவெளி எடுத்துக் கொண்டுள்ள அஜித், ஐரோப்பாவில் விடுமுறைக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அவரை தினந்தோறும் பைக், காருடன் வித்தியாசமான புகைப்படங்களில் பார்க்க முடிகிறது. இந்தப் புகைப்படங்கள் அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகின்றன.

அஜித் குறித்து ஜெய் உருக்கம்
தனக்கு நெருக்கமானவர்கள், சக நடிகர்கள், ரசிகர்கள் என உதவி தேவைப்படுபவர்களுக்கு தொடர்ந்து உதவி வருபவர் அஜித். இந்நிலையில் அவர் தனக்கு கொடுத்த ஆலோசனை மற்றும் அதனால் தன்னுடைய கேரியரில் தான் நடித்த பெஸ்ட் படம் குறித்து நடிகர் ஜெய் தற்போது பகிர்ந்துள்ளார்.

படத்தை தேர்ந்தெடுத்த அஜித்
தான் சினிமாவில் என்ட்ரி ஆனபோது எந்த மாதிரியான படங்களை தேர்ந்தெடுப்பது என்ற குழப்பம் தனக்கு இருந்ததாகவும் அப்போதுதான், சுப்ரமணியபுரம் படத்தை தேர்ந்தெடுத்துக் கொடுத்து அதில் நடிக்க அஜித் தனக்கு அறிவுறுத்தியதாகவும் ஜெய் கூறியுள்ளார். அந்தப் படம் ஜெய் கேரியரில் பெஸ்ட்டாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

சைக்கோ வில்லன்
தற்போது ஜெய் நடிப்பில் பட்டாம்பூச்சி படம் ரிலீசாகியுள்ளது. இதில் சைக்கோ வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ஜெய். சுந்தர் சி உள்ளிட்டவர்களும் நடித்துள்ள இந்தப் படம் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ள போதிலும் படத்தில் ஜெய் கேரக்டர் வரவேற்பை பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications











