தியேட்டர் ரிலீஸுக்கு ரெடியாகிறது.. ஜெய் நடிக்கும் 'பிரேக்கிங் நியூஸ்'.. கிராபிக்ஸ் மிரட்டுமாம்!
சென்னை: ஜெய் நடிக்கும் படத்துக்கு பிரேக்கிங் நியூஸ் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
நடிகர் ஜெய், சுசீந்திரன் இயக்கும் சிவ சிவா என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். அவர் ஜோடியாக மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கிறார்.
சத்ரு, சரத், ஜே.பி., காளி வெங்கட், பால சரவணன், முத்துக்குமார், அர்ஜெய் பிரின்ஸ், அருள்தாஸ் உட்பட பலர் நடித்துள்ளனர்.

பானுஶ்ரீ நாயகி
இந்தப் படம் மூலம் இசை அமைப்பாளராகவும் அவர் மாறியிருக்கிறார். இதையடுத்து அவர் 'பிரேக்கிங் நியூஸ்' என்ற படத்தில் நடிக்கிறார். இதை ஆண்ட்ரு பாண்டியன் இயக்கி இருக்கிறார். பானுஶ்ரீ நாயகியாக நடிக்கிறார். தேவ் கில், ராகுல் தேவ் வில்லன்களாக நடிக்கின்றனர். ஜானி லால் ஒளிப்பதிவு செய்கிறார்.

அற்புத அனுபவம்
திருகடல் உதயம் இப்படத்தைத் தயாரித்துள்ளார். படம் பற்றி ஆண்ட்ரு பாண்டியன் கூறியதாவது: ஷூட்டிங் முடிந்துவிட்டது. போஸ்ட் புரடெக்ஷன் பணிகள் நடந்து வருகிறது. ஜெய்யுடன் பணிபுரிந்த அனுபவம் அற்புதமாக இருந்தது. அவரது ஒத்துழைப்பும் படத்தின் மீதான ஈடுபாடும் அபாரமானதாக இருந்தது.

பிரமித்து போனேன்
ஜெய் மிகுந்த ஈடுபாட்டுடன் நடித்தார். எடிட் செய்தபோது அவர் நடிப்பை கண்டு பிரமித்து போனேன். இப்படம் அவரை பெரிய இடத்துக்கு அழைத்து செல்லும். என்னை நம்பி பெரிய பட்ஜெட்டை தந்த தயாரிப்பாளர் திருக்கடல் உதயத்துக்கு நன்றி.

கிராபிக்ஸ் பணிகள்
இப்படத்தின் பெரும் பகுதி கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் பணிகள் கொண்டதாக உள்ளது. அதற்காக கிராபிக்ஸ் பணியில் சுமார் 450 பேர் பணிபுரிந்து வருகிறார்கள். இந்தப் படம் கண்டிப்பாக ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தைக் கொடுக்கும். இவ்வாறு கூறியுள்ளார். இந்தப் படம் தியேட்டரில் வெளியாக இருக்கிறது.


Click it and Unblock the Notifications











