வெளியானது ஜெய் -சுசீந்திரன் படத்தின் மிரட்டல் ட்ரெயிலர்... மீண்டும் சுப்ரமணியபுரம் லுக்கில் ஜெய்

சென்னை : நடிகர் ஜெய் லீட் கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் வீரபாண்டியபுரம்.

இந்தப் படத்தை இயக்குநர் சுசீந்திரன் இயக்கியுள்ளார். இந்தப் படத்திற்கு முன்னதாக சிவ சிவா என்று பெயரிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் படத்தின் ட்ரெயிலர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதை விஜய் சேதுபதி உள்ளிட்ட 6 பிரபலங்கள் வெளியிட்டுள்ளனர்.

வீரபாண்டியபுரம் படம்

வீரபாண்டியபுரம் படம்

அடுத்தடுத்த வெற்றிப் படங்களை கொடுத்து வருகிறார் இயக்குநர் சுசீந்திரன். சிம்புவை வைத்து இவர் கடைசியாக இயக்கிய ஈஸ்வரன் படம் இவருக்கு சிறப்பாக கைக்கொடுத்தது. இந்நிலையில் தற்போது நடிகர் ஜெய் லீட் கதாபாத்திரத்தில் நடிக்கும் வீரபாண்டியபுரம் என்ற படத்தை இவர் இயக்கி முடித்துள்ளார்.

டைட்டில் மாற்றம்

டைட்டில் மாற்றம்

இந்தப் படத்திற்கு முன்னதாக சிவ சிவா என்று பெயரிடப்பட்டிருந்தது. மண்மணம் சார்ந்த கதையாக உள்ளதால் இந்தப் படத்திற்கு அதே தன்மையுடன் டைட்டில் வைக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் தலைப்பை மாற்றியுள்ளதாக இரு தினங்களுக்கு முன்பு சுசீந்திரன் தெரிவித்திருந்தார்.

இசையமைக்கும் ஜெய்

இசையமைக்கும் ஜெய்

இந்தப் படத்தில் மீனாட்சி, சத்ரு, சரத், ஜேபி, காளி வெங்கட், பால சரவணன், முத்துக்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்தில் ஹீரோவாக நடிப்பதுடன் படத்தின் இசையையும் வடிவமைத்துள்ளார் ஜெய். சுப்ரமணியபுரம் படத்திற்கு பிறகு அதே கெட்டப்புடன் இவரை இந்தப் படததில் பார்க்க முடிகிறது.

ட்ரெயிலர் வெளியீடு

ட்ரெயிலர் வெளியீடு

இந்தப் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்நிலையில் தற்போது படத்தின் ட்ரெயிலரையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். மேலும் வரும் 18ம் தேதி முதல் இந்தப் படம் ரிலீசாக உள்ளதாகவும் படக்குழு அறிவித்துள்ளது.

ட்ரெயிலரை வெளியிட்ட பிரபலங்கள்

ட்ரெயிலரை வெளியிட்ட பிரபலங்கள்

இந்நிலையில் இன்றைய தினம் படத்தின் ட்ரெயிலரை விஜய் ஆன்டனி, விஜய் சேதுபதி, சசிக்குமார், விஷ்ணு விஷால், சூரி மற்றும் விக்ராந்த் ஆகியோர் தங்களது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். படக்குழுவினருக்கு வாழ்த்துக்களையும் பகிர்ந்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X