ஜருகண்டி... தமிழ் படத்திற்கு தெலுங்கு பெயர்... காரணம் இதுதான்!

ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டுவதற்காகவே தமிழ் படத்திற்கு தெலுங்கில் பெயர் வைத்துள்ளனர்.

Recommended Video

ஜருகண்டி... தமிழ் படத்திற்கு தெலுங்கு பெயர்...காரணம் இதுதான்!- வீடியோ

சென்னை: ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டுவதற்காகவே தன் படத்திற்கு ஜருகண்டி என பெயர் வைத்ததாக அப்படத்தின் தயாரிப்பாளர் நிதின் சத்யா தெரிவித்துள்ளார்.

சத்தம் போடாதே, சென்னை 28 உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் நிதின் சத்யா. இவர் தயாரித்துள்ள படம் ஜருகண்டி. இயக்குனர் வெங்கட் பிரபுவிடம் உதவியாளராக பணியாற்றிய பிச்சுமணி இந்த படத்தின் மூலம் இயக்குனர் ஆகியிருக்கிறார்.

ஜருகண்டி படத்தின் கதாநாயகனாக ஜெய் நடித்துள்ளார். கதாநாயகியாக புதுமுகம் ரெபா மோனிகா அறிமுகமாகிறார். ரோபோ சங்கர், டேனி ஆனி போப், இளவரசு, போஸ் வெங்கட், அமித், ஜெயக்குமார், ஜி.எம்.குமார், நந்தா சரவணன், காவ்யா உள்ளிட்டோர் படத்தில் நடித்துள்ளனர்.

ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்ய, பிரவீன் கே.எல். படத்தொகுப்பு பொறுப்பை ஏற்றுள்ளார். போபோ சங்கர் இசையமைத்துள்ளார். நிதின் சத்யாவுடன் இணைந்து பத்ரி கஸ்தூரி படத்தை தயாரித்துள்ளார்.

ஜருகண்டி...

ஜருகண்டி...

டத்தின் டிரெய்லர் இன்னும் வெளியிடப்படாத நிலையில், பத்திரிகையாளர்களுக்கு பிரத்யேகமாக திரையிடப்பட்டது. பின்னர், தயாரிப்பாளர் நிதின் சத்யாவும், இயக்குனர் பிச்சுமணியும் செய்தியாளர்களிடம் பேசினர்.
அப்போது, ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டுவதற்காகவே படத்திற்கு ஜருகண்டி என பெயர் வைத்தாகக் அவர்கள் கூறினர்.

நடிப்புக்கு பிரேக்...

நடிப்புக்கு பிரேக்...

இதுதொடர்பாக நிதின் சத்யா மேலும் கூறியதாவது, "தயாரிப்பு துறையில் நிறைய அனுபவம் இருப்பதால், நீண்ட ஆய்வுக்கு பிறகு இந்த படத்தை தயாரிக்கும் முடிவை எடுத்தேன். அதற்காக நடிப்பிற்கு பிரேக் விட்டுள்ளேன்.
இந்த படத்தில் கூட இயக்குனர் கட்டாயப்படுத்தியதால் தான் ஒரு சிறு காட்சியில் மட்டுமே நடித்துள்ளேன். 46 நாட்களில் படப்பிடிப்பை முடித்துவிட்டோம். சென்னை, புதுச்சேரி, ஐதராபாத் ஆகிய இடங்களில் படப்பிடிப்பை நடத்தினோம்.

தெலுங்கில் டைட்டில்...

தெலுங்கில் டைட்டில்...

இந்த படம் மிகவும் விறுவிறுப்பாக இருக்கும். அதனால் தான் தெலுங்கு வார்த்தையாக இருந்தாலும் கூட பரவாயில்லை என படத்திற்கு 'ஜருகண்டி' என தலைப்பு வைத்துள்ளோம். வெங்கட்பிரபு தான் இந்த தலைப்பை வைக்க சொன்னார்.
இந்த படம் மிகவும் புதிய அனுபவத்தை தரும். நமக்கு தேவைப்படும் போது, நாம் செய்வதை நியாயப்படுகிறோம். இது தான் படத்தின் ஒன்லைன்.

லோன் மறுக்கப்படும் ஹீரோ...

லோன் மறுக்கப்படும் ஹீரோ...

சொந்தமாக டிராவல்ஸ் தொடங்க நினைத்து வங்கியில் லோன் கேட்டு செல்லும் ஹீரோவுக்கு, கடன் மறுக்கப்படுகிறது. இதனால் வேறு வழிகளில் அவர் கடன் வாங்கி பிரச்சினைகளில் சிக்கிக்கொள்கிறார். அதில் இருந்து எப்படி அவர் மீண்டு வருகிறார் என்பதை விறுவிறுப்பாக சொல்லியிருக்கிறோம்.

ஜூலையில் படம்...

ஜூலையில் படம்...

ஜூலை இறுதியில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளோம். டிரெய்லரை யாரை வைத்து வெளியிடலாம் என தேடிக் கொண்டிருக்கிறோம். கங்கை அமரன் இதில் ஒரு பாடல் எழுதியுள்ளார். அந்த பாடல் மிக அற்புதமாக வந்துள்ளது".
இவ்வாறு அவர் கூறினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X