ஸ்புட்னிக் தடுப்பூசியை போட்டுக்கொண்டார் நடிகர் ஜெய்!
சென்னை : ஜெய் இப்பொழுது சுசீந்திரன் இயக்கத்தில் சிவ சிவ என்ற படத்தில் நடித்து வருகிறார். அதை அடுத்து இன்னொரு திரைப்படத்திலும் இந்த கூட்டணி இணைகிறது.
கடைசியாக ஜெய்-யின் 25வது திரைப்படமான கேப்மாரி எஸ் ஏ சந்திரசேகர் இயக்கத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
மிகவும் கவனத்துடன் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் ஜெய் இப்பொழுது ஸ்புட்னிக் தடுப்பூசியைப் போட்டுக் கொண்டு அந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

கேப்மாரி
தமிழ் சினிமாவில் தனக்கான பெரும் ரசிகர் பட்டாளத்தை கொண்டு வெற்றிகரமாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் ஜெய் இப்பொழுது கை நிறைய படங்களில் நடித்து வருகிறார். கடைசியாக ஜெய்யின் 25வது படமாக கேப்மாரி வெளியானது. இந்த படத்தை எஸ் ஏ சந்திரசேகர் இயக்கி இருக்க அதுல்யா, வைபவி இதில் ஹீரோயின்களாக நடித்திருந்தனர்.
Recommended Video

மீண்டும் இணைந்து
இப்பொழுது சுசீந்திரன் இயக்கத்தில் சிவசிவ என்ற படத்தில் ஜெய் நடித்து வருகிறார். இந்த படத்தை முடித்த கையோடு மற்றொரு படத்திலும் இதே கூட்டணி இணைய உள்ளது உறுதியாகியுள்ளது. இதுதவிர எண்ணித்துணிக, வெங்கட்பிரபுவின் பார்ட்டி ,பிரேக்கிங் நியூஸ்,குற்றமே குற்றம் போன்ற படங்களில் நடித்து வருகிறார். அறம் பட இயக்குனர் கோபி நாயர் மற்றும் சுந்தர் சி இயக்கத்தில் தலா ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

கட்டுப்பாடுகள்
இதுவரை ஹீரோவாக வலம் வந்த ஜெய் முதல்முறையாக வில்லனாக அட்லி தயாரிக்கும் படத்தில் நடிக்க உள்ளார். ஒரு வழியாக கொரோனா ஊரடங்கு சற்று தளர்வுகள் அறிவிக்கப்பட்டு படப்பிடிப்புகள் தொடங்கி இருக்கின்ற சூழலில் படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் அனைவரும் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் என படக்குழு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. திரைப் பிரபலங்கள் பலரும் கொரோனா தடுப்பூசி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன் விருப்பமான தடுப்பூசிகளையும் போட்டுக் கொண்டு வருகின்றனர்.

பெயர் நன்கு தெரிகின்ற
அந்த வகையில் நடிகர் ஜெய் இப்பொழுது கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டு அந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் . அவர் ஸ்புட்னிக் என்ற தடுப்பூசி போட்டுக் கொண்டதாக தெரிவித்துள்ளார். ஸ்புட்னிக் பெயர் நன்கு தெரிகின்றது புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார். நடிகர் நடிகைகளை தொடர்ந்து மக்களும் தடுப்பூசி போட்டுக் கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











