'நீங்க இல்லேன்னா நான் இல்லீங்ணா..!' - மறக்காமல் விஜய்க்கு நன்றி சொன்ன ஜெய்!

By Vignesh Selvaraj

சென்னை : வளர்ந்து வரும் நடிகர் ஜெய், இளையதளபதி விஜய்க்கு இன்று நன்றி தெரிவித்துள்ளார். 'நீங்கள் இல்லையென்றால் நான் இல்லை' என தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார் ஜெய்.

நடிகர் விஜய்க்கு எவ்வளவு பெரிய ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும். கேரளா, ஆந்திரா போன்ற அண்டை மாநில ரசிகர்கள் மட்டுமில்லாது, உலகளவில் ரசிகர்கள் உள்ளனர்.

சாந்தனு, ஜி.வி.பிரகாஷ், ஜெய் போன்ற சினிமா நடிகர்களும் விஜய்யின் தீவிர ரசிகர்களாக இருக்கிறார்கள். பள்ளி, கல்லூரியில் படிக்கும் காலத்திலிருந்தே ரசிகர்களாக இருக்கும் இவர்கள் சினிமாவுக்கு வந்தபிறகும் அப்படியே தொடர்கிறார்கள்.

பகவதி படம்

பகவதி படம்

விஜய், ஜெய், ரீமாசென், வடிவேலு ஆகியோர் நடிப்பில் கடந்த 2002-ம் ஆண்டு வெளியான 'பகவதி' படம் வெளிவந்து இன்றோடு 15 ஆண்டுகள் நிறவடைகிறது. இன்றைய தேதியில் தான் ஏ.வெங்கடேஷ் இயக்கிய 'பகவதி' திரைப்படம் வெளியானது. பகவதி வெளியாகி 15 வருடங்கள் நிறைவடைந்ததை அடுத்து விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகிறார்கள்.

விஜய்யின் டாக்டர் தம்பி

விஜய்யின் டாக்டர் தம்பி

'பகவதி' படத்தில் விஜய்யின் தம்பியாக நடித்திருப்பார் ஜெய். விஜய் டீக்கடை நடத்தி தம்பி ஜெய்யை படிக்க வைப்பார். ஜெய், காதல் விவகாரத்தில் கொல்லப்படுவார். ஜெய்யின் அறிமுகப் படமான பகவதியில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். இப்போது பல படங்களில் ஹீரோவாக நடித்து வந்தாலும், அறிமுகமே விஜய்யின் தம்பி என்பதில் சிறப்புதான்.

சினிமா வாழ்வில் 15 வருடங்கள்

இந்நிலையில் தற்போது நடிகர் ஜெய் தனது ட்விட்டர் பக்கத்தில், 'எனது சினிமா வாழ்வில் 15 வருடங்களை இன்று நிறைவு செய்கிறேன். இன்னும் போக வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது. உங்களின் ஆதரவு இல்லாமல் எதுவுமே நடந்திருக்காது. எல்லோருக்கும் நன்றி' எனக் குறிப்பிட்டிருக்கிறார் ஜெய்.

விஜய் அண்ணா

'என் மீது நம்பிக்கை வைத்து, இப்படத்தில் தம்பியாக நடிக்க வாய்ப்புக் கொடுத்ததற்கு நன்றி. நீங்கள் இல்லாமல் நான் இப்போது இங்கே இல்லை' என நடிகர் விஜய்யை மென்சன் செய்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் ஜெய். அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X