Vijay 68 - விஜய் 68ல் இணையும் பிரபல ஹீரோ?.. 20 வருடங்களுக்கு பிறகு நடக்கப்போகுதா?
சென்னை: Vijay 68 (விஜய் 68) வெங்கட் பிரபு - விஜய் இணையும் படம் பற்றிய புதிய தகவல் ஒன்று கோலிவுட்டில் வட்டமடித்துக்கொண்டிருக்கிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்துவருகிறார் விஜய். அக்டோபர் 19ஆம் தேதி படம் ரிலீஸ் ஆகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டது. இதனையொட்டி படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. தற்போது திருப்பதியில் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் விஜய் உள்ளிட்டோர் கலந்துகொண்டிருப்பதாக கூறப்படுகிறது. சமீபத்தில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கும், ஃபர்ஸ்ட் சிங்கிளும் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது.

விஜய் 68: லியோ படத்தில் நடித்துக்கொண்டிருக்கும்போதே வெங்கட் பிரபு இயக்கத்தில் தனது 68ஆவது படத்தில் நடிக்க கமிட்டாகிவிட்டார் விஜய். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். முதன்முறையாக விஜய்யுடன் வெங்கட் பிரபு இணைவதன் காரணமாக அஜித்துக்கு எப்படி ஒரு மங்காத்தா அமைந்ததோ அதேபோல் விஜய்க்கும் இந்தப் படம் அமையும் என்ற நம்பிக்கையில் இருக்கின்றனர் விஜய்யின் ரசிகர்கள்.
தீவிர டிஸ்கஷன்: வெங்கட் பிரபுவும் கஸ்டடி படத்தில் சறுக்கியதால் இந்த வாய்ப்பை பயன்படுத்தி மெகா ஹிட்டை கொடுத்து விட வேண்டுமென முனைப்போடு பணியாற்றிவருகிறார். எனவே தனது உதவி இயக்குநர் டீமோடு அலுவலகத்தில் கதையை டெவலப் செய்யும் பணியில் இறங்கியிருக்கிறார். எந்த மாதிரியான கதை என்பது ஃபர்ஸ்ட் லுக்கோ அல்லது டீசரோ வெளியாகும்போது தெரியவரும். இருந்தாலும் இது அரசியல் கதை, தந்தை மகனுக்கான ஈகோ கதை என பலரும் பல கதைகளை கூறிவருகின்றனர்.
ஸ்ட்ரிக்ட் ஆர்டர்: இதற்கிடையே விஜய் 68ல் ஜோதிகா நடிக்கவிருப்பதாக தகவல் வெளியானது. இதனையடுத்து தனது உதவி இயக்குநர்கள் மூலம்தான் இதுபோன்ற தகவல் கசிய வாய்ப்பிருப்பதாக கருதும் வெங்கட் பிரபு அவர்களை அலுவலகத்திலேயே தங்க உத்தரவு போட்டுவிட்டதாகவும் சமீபத்தில் ஒரு தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது. சூழல் இப்படி இருக்க தற்போது விஜய் 68 பற்றிய புதிய பேச்சு ஒன்று ஓடிக்கொண்டிருக்கிறது.
விஜய் - ஜெய் கூட்டணி?: அதாவது விஜய் 68 படத்தில் ஜெய் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. ஜெய் வெங்கட் பிரபுவுக்கு நெருக்கமானவர் என்பதால் இதில் நடிக்க வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக முணுமுணுப்பு எழுந்திருக்கிறது. அதேசமயம் இது நடக்க சாத்தியமா இல்லையா என்பது பற்றி படக்குழுவுக்கே தெரியும். ஏற்கனவே ஜெய்யிடம் இதுகுறித்து கேட்கப்பட்டிருந்தபோது எனக்கும் ஆசைதான். ஆனால் வெங்கட் பிரபு மனது வைக்க வேண்டும் என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ஜெய்: விஜய் நடித்த பகவதி படத்தின் மூலம்தான் ஜெய் திரையுலகில் அறிமுகமானார். அதன் பிறகு தொடர்ந்து நடித்துவந்தவருக்கு சுப்ரமணியபுரம் படம் கரியர் பெஸ்ட் படமாக அமைந்தது. ஆனால் அதற்கு பிறகு ஜெய் நடித்த படங்களில் எங்கேயும் எப்போதும் தவிர வேறு எந்தப் படமும் சொல்லிக்கொள்ளும்படி அமையவில்லை. கடைசியாக அவர் நடிப்பில் தீராக் காதல் படம் வெளியானது. அந்தப் படமும் சரியாக போகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











