Don't Miss!
- News
எங்கள் வேட்பாளர் ரெடி.. ‘ஆப்ஷன் 2’.. அதுக்குதான் ஓபிஎஸ் ‘வெய்ட்’ பண்றார்.. போட்டு உடைத்த புகழேந்தி!
- Lifestyle
கருட புராணத்தின் படி இந்த 5 விஷயங்களை செஞ்சா, மரணத்திற்கு பின் நரகம் செல்வதை தவிர்க்கலாம்..!
- Automobiles
இந்த கதை தெரியுமா? சஃபாரி பெயருக்காக டாடாவிடம் கையேந்தி நின்ற பிரபல வெளிநாட்டு கார் நிறுவனம்!!
- Sports
"கேப்டன் குற்றச்சாட்டு; துணைக்கேப்டன் பாராட்டு" நியூசி,தொடரில் ஏற்பட்ட சர்ச்சை..குழம்பும் ரசிகர்கள்
- Technology
தரமான 5G ஸ்மார்ட்போனை இந்தியாவுக்கு கொண்டுவரும் விவோ.! என்னென்ன அம்சங்கள்?
- Finance
பொறுப்புக்கு வந்த வாரிசுகள்.. குமார் மங்கலம் பிர்லா நிம்மதி..!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
இந்த வில்லத்தனத்த ஜெய்சங்கர் அப்பவே செஞ்சிட்டாரு.. சீனாக்காரங்க ரொம்ப லேட்... வைராலாகும் வீடியோ!
சென்னை: கொரோனா வைரஸ் மக்களை அச்சுறுத்தி வரும் நிலையில் சீனாவை குத்தும் வகையில் தமிழ் திரைப்படத்தின் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
கொரோனா வைரஸால் உலக நாடுகள் பலவும் பெரும் நெருக்கடி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. ஏராளமான மக்கள் செத்து மடிந்து வருகின்றனர்.
டிடி எப்போ பீவி ஆனாங்கோ.. முஸ்லிம் பெண் தோற்றத்தில்.. ரம்ஜான் வாழ்த்து.. ரசிகர்கள் கேள்வி!
கொரோனா வைரஸால் அமெரிக்கா சின்னாபின்னமாகியிருக்கிறது. சீனாவில் இருந்து உருவான இந்த வைரஸ் உலக நாடுகளின் பொருளாதாரத்தையும் அதளபாதாளத்தில் தள்ளியிருக்கிறது.

பொருளாதாரத்தை சரிக்க
ஆனால் வைரஸ் தொற்று உருவான சீனா மட்டும் தப்பித்து விட்டது. உலக நாடுகள் முடங்கியுள்ள நிலையில் சீனா மட்டும் பழையப்படி தனது இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. கொரோனா வைரஸ் உலக நாடுகளின் பொருளாதாரத்தை சரிக்க சீனாவால் உருவாக்கப்பட்ட சதி என பல்வேறு நாடுகளும் குற்றம்சாட்டி வருகின்றன.

சீனாவின் போலித்தனம்
உலக நாடுகள் முழுக்கவும் கொரோனாவை பரப்பிவிட்ட சீனா, அதற்கான மருத்துவ உபகரணங்களை உலக நாடுகளுக்கு விற்பனை செய்து காசு பார்த்து வருகிறது. மாஸ்க், கையுறைகள், ரேபிட் டெஸ்ட் கருவி என அனைத்தையும் விற்பனை செய்து வரும் சீனா அதிலும் போலித்தனத்தை காட்டியிருக்கிறது.

சீனாவின் லீலைகள்
இந்நிலையில் சீனாவின் இந்த செயல்பாட்டை குத்தும் வகையில் தமிழ் திரைப்படத்தின் வீடியோ க்ளிப்பீங் ஒன்று வைரலாகி வருகிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு ஜெய் சங்கர் நடித்த அந்த படத்தின் காட்சியில் சீனா இப்போது அரங்கேற்றி வரும் லீலைகள் அப்படியே இடம் பெற்றிருப்பதாக நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர்.

மருந்தை கண்டுபிடிக்கனும்
அதாவது, அந்தப் படத்தில் வில்லனாக நடித்திருக்கும் ஜெய் சங்கர், அதில் புதுவிதமான நோயை உண்டாக்கும் விஷக் கிருமிகளை உருவாக்க வேண்டும் என்று கட்டளையிடுகிறார். மேலும் அந்த நோய்க்கு மாற்று மருந்து ஒன்றையும் கண்டுபிடிக்க வேண்டும் என்றும் கூறுகிறார்.

வில்லத்தனம்
தண்ணீர், பால் மூலம் பரவும் இந்த நோயை போக்க மக்கள் எவ்வளவு விலை கொடுத்து வேண்டுமானாலும் வாங்குவார்கள் என வசனம் பேசுகிறார். இந்த வில்லத்தனம் தற்போது சீனாவின் வில்லத்தனத்துடன் ஒப்பிட்டு வைரலாக்கி வருகின்றனர் நெட்டிசன்கள்.