அந்த மனசுதான் சார் கடவுள்... அஜித்தின் இன்னொரு முகம் இதுதான்... ரகசியம் சொன்ன பிரபல நடிகரின் மகன்
சென்னை: கோலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித் சினிமா மட்டுமின்றி பைக் ரேஸ், கார் ரேஸ், ஏரோனாட்டிக்கல் இன்ஜினியரிங் என பல துறைகளில் கலக்கி வருகிறார்.
அதேபோல், ரசிகர்களின் நலன் கருதி தனது ரசிகர் மன்றங்களை மொத்தமாக கலைத்துவிட்டார் அஜித்.
சினிமா உட்பட எந்தவொரு பொதுநிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ளாத அஜித்தின் பல உண்மையான குணம் குறித்து பலருக்கும் தெரியாது.
இந்நிலையில், அஜித் குறித்து அவரது நெருங்கி நண்பரும் நடிகர் ஜெய்சங்கரின் மகனுமான விஜய் சங்கர் சொன்ன சில ரகசியங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

கோலிவுட்டின் அதிசயப் பிறவி
அமராவதி திரைப்படம் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமான அஜித், தற்போது கோலிவுட்டின் டாப் ஹீரோவாக அசத்தி வருகிறார். கடந்த மாதம் பொங்கலுக்கு வெளியான துணிவு திரைப்படம் நீண்ட இடைவேளைக்குப் பிறகு அஜித்துக்கு சூப்பர் ஹிட்டாக அமைந்தது. இதனைத் தொடர்ந்து லைகா தயாரிக்கும் ஏகே 62 படத்தில் நடிக்க ரெடியாகவுள்ளார். இந்நிலையில், தனது ரசிகர் மன்றங்களை கலைத்துவிட்ட அஜித், சினிமா உட்பட எந்தவொரு பொதுநிக்ழ்ச்சிகளிலும் கலந்துகொள்வது கிடையாது. இதனால் அஜித்தின் பெர்சனலான விசயங்கள் எதுவுமே வெளியே வராது.

அஜித்தின் நண்பர் சொன்ன ரகசியம்
நடிகராக மட்டும் இல்லாமல் பைக் ரேஸிங், கார் ரேஸிங் என ஆர்வம் காட்டிய அஜித், இப்போது அடிக்கடி பைக் ட்ரீப் அடித்து வருகிறார். அதேபோல், ஏரோனாட்டிங், துப்பாக்கி சுடுதல் போன்றவைகளிலும் பிஸியாக உள்ளார். இந்நிலையில், அஜித்தின் நெருங்கிய நண்பர் யார் எனக் கேட்டால், அவரைப் பற்றி தெரிந்த பலரும் விஜய் சங்கரைதான் கை காட்டுவார்கள். தமிழ்த் திரையுலகின் ஜேம்ஸ்பாண்ட் என ரசிகர்களால் கொண்டாடப்பட்ட மறைந்த நடிகர் ஜெய்சங்கரின் மகனான விஜய் சங்கர், சென்னையின் பிரபல கண் மருத்துவராக உள்ளார். அஜித்தின் நெருங்கிய நண்பரான விஜய்சங்கர் சொன்ன ரகசியம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

சீக்ரெட்டாக மருத்துவ உதவி
நடிகர் ஜெய்சங்கரின் விருப்பப்படி கண் மருத்துவரான விஜய் சங்கர், அடிக்கடி இலவச கண் சிகிச்சை முகாம்களை நடத்தி வருகிறாராம். இதையெல்லாம் பார்த்த அஜித், யாரேனும் ஆப்ரேஷன் செய்ய பண வசதி இல்லாமல் கஷ்டப்பட்டால் அவர்களை திருப்பி அனுப்ப வேண்டாம். அவர்களின் சிகிச்சைக்கு தேவையான மொத்த செலவையும் நான் கொடுக்கிறேன் என சொன்னதோடு, பணம் கொடுத்து உதவியுள்ளார். இதையெல்லாம் வெளியே தெரியவேண்டாம் என அஜித் விஜய் சங்கரிடம் கேட்டுக் கொண்டதாக சொல்லப்படுகிறது.

அவரு எப்பவுமே அப்படித்தான்
இந்த உண்மையெல்லாம் தற்போது விஜய் சங்கரின் தம்பி சஞ்சய் சங்கர் அளித்த பேட்டி மூலம் தெரியவந்துள்ளது. விஜய் சங்கர் மூலமாக மட்டுமில்லாமல் பலவழிகளிலும் அஜித் மருத்துவ உதவி செய்துவருவதாக அவருக்கு நெருக்கமானவர்கள் கூறியுள்ளனர். சில வருடங்களுக்கு முன்னர் தனது வீட்டில் வேலைபார்த்து வந்தவர்களுக்கு சொந்தமாக வீடு கட்டிக் கொடுத்தார். அதேபோல் 90களில் தனது படங்கள் மூலம் இயக்குநரான எஸ்ஜே சூர்யா, ஏஆர் முருகதாஸ் போன்றவர்களுக்கு முதல் கார் வாங்கி கொடுத்ததும் அஜித் தான் என்பது குறிப்பிடத்தக்கது. சினிமாவில் மட்டும் இல்லாமல் ரியலாகவும் அவர் ஹீரோ தான் அஜித்தின் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











