பிரதர் மவுன்டெயின்.. அண்ணாமலை வெளியாகி 29 வருஷம் ஆகிடுச்சா.. என்னால நம்பவே முடியல.. ஜனகராஜ் ட்வீட்!

சென்னை: அண்ணாமலை படத்தில் தப்புத் தப்பாக ஆங்கிலத்தில் பேசி சூப்பர்ஸ்டாரை குஷ்புவிடம் சிக்க வைத்து நம்மையெல்லாம் சிரிக்க வைத்திருப்பார் நகைச்சுவை நடிகர் ஜனகராஜ்.

நடிகர் ரஜினிகாந்தை சூப்பர்ஸ்டார் அந்தஸ்த்துக்கு உயர்த்திய கிளாசிக் கல்ட் படமான அண்ணாமலை வெளியாகி இன்றுடன் 29 ஆண்டுகளை கடந்துள்ளது.

இந்நிலையில், நடிகர் ஜனகராஜ் பதிவிட்டுள்ள "பிரதர் மவுன்டெயின்" ட்வீட் ரசிகர்கள் மத்தியில் பழைய நினைவுகளை மீண்டும் கொண்டு வந்து சேர்த்துள்ளது.

மலை டா அண்ணாமலை

மலை டா அண்ணாமலை

வந்தேன் டா பால்காரன் என பால் வடியும் முகத்துடன் ஆடும் போதும் சரி.. சிகரெட் புகையை ஊதித் தள்ளி மலை டா அண்ணாமலை என மாஸ் காட்டும் போதும் சரி நான் தான் என்றைக்கும் ஸ்டைல் சாம்ராட் என அப்போதே ஆணித் தரமாக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அண்ணாமலை படத்தின் மூலம் சொல்லி இருப்பார்.

29 ஆண்டுகள்

29 ஆண்டுகள்

பாட்ஷா படத்தை இயக்குவதற்கு முன் சூப்பர்ஸ்டார் வைத்து இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கிய சூப்பர் டூப்பர் ஹிட் படம் அண்ணாமலை வெளியாகி இன்றுடன் 29 ஆண்டுகள் ஆகின்றன. 1992ம் ஆண்டு ஜூன் 27ம் தேதி அண்ணாமலை திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி வசூல் வேட்டை ஆடியது.

பாம்பு சீன்

பாம்பு சீன்

பாத்ரூமில் குஷ்பு குளித்துக் கொண்டிருக்கும் போது பாம்பு வரும் காட்சியும், ரஜினிகாந்த் குஷ்புவை அப்படி பார்த்து விட்டு கடவுளே கடவுளே எனும் சொல்லும் காட்சிகள் ஏகப்பட்ட ரசிகர்களின் ஃபேவரைட் நகைச்சுவை காட்சியாகவே இன்றைக்கும் இருக்கிறது.

அடே நண்பா சவால் வேண்டாம்

அடே நண்பா சவால் வேண்டாம்

உயிருக்கு உயிராக ஒரு தாய் வயிற்றுப் பிள்ளையாக பழகும் நண்பனே தனக்கும் தன் குடும்பத்துக்கும் செய்த துரோகத்தால் சும்மா இருந்தா பால்காரன் சூப்பர்ஸ்டார் அண்ணாமலையாக மாறும் கதையில் வரும் அடே நண்பா சவால் வேண்டாம் பாடல் பலருக்கும் ஒரு படிப்பினையாகவும் அமைந்தது.

நம்பவே முடியல

நம்பவே முடியல

அண்ணாமலை படம் வெளியாகி ஏற்கனவே 29 ஆண்டுகள் ஆகிவிட்டன என்று என்னால் நம்ப முடியவில்லை என நடிகர் ஜனகராஜ் அண்ணாமலை படத்தில் ரஜினியுடன் இருக்கும் புகைப்படத்தை ஷேர் செய்து பதிவிட்டுள்ள ட்வீட் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

பிரதர் மவுன்டெயின்

பிரதர் மவுன்டெயின்

நேசமணி பொன்னையா தெரு என ஆங்கிலத்தில் எழுதியிருக்க நாசமா நீ போனியா என ஜனகராஜ் படிப்பதும், அண்ணாமலை எனும் பெயரை ஆங்கிலத்தில் டிரான்ஸ்லேட் செய்கிறேன் என பிரதர் மவுன் டெயின் என அழைப்பதும் வேற லெவல் காமெடி. தனது ட்வீட்டில் மறக்காமல் பிரதர் மவுன்டெயினையும் குறிப்பிட்டுள்ளார் ஜனகராஜ்.

அண்ணாமலை டு அண்ணாத்த

அண்ணாமலை டு அண்ணாத்த

29 ஆண்டுகள் கழித்து அண்ணாத்த படத்தின் ரிலீசுக்காக காத்துக் கொண்டிருக்கிறார் நடிகர் ரஜினிகாந்த். மன்னன், அண்ணாமலை உள்ளிட்ட படங்களில் ரஜினியுடன் நடித்த குஷ்புவும் அண்ணாத்த படத்தில் நடித்து இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு தீபாவளிக்கு படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X