என்றும் சூப்பர் ஸ்டார்தான்... பழைய நினைவுகளில் மூழ்கிய நடிகர் ஜனகராஜ்

சென்னை : நடிகர் ஜனகராஜ் கடந்த 19ம் தேதி முதல் தனது ட்விட்டர் பயணத்தை துவங்கியுள்ளார்.

விவேக், கவுண்டமணி உள்ளிட்டோர் குறித்த நினைவுகளை பகிர்ந்து கொண்டுள்ளார்.

இதனிடையே சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் குறித்த பழைய நினைவுகளையும் தற்போது ஜனகராஜ் பகிர்ந்துள்ளார்.

சூப்பர்ஹிட் படங்கள்

சூப்பர்ஹிட் படங்கள்

தன்னுடைய கேரியரில் சிறப்பான பல படங்களில் நடித்தவர் நடிகர் ஜனகராஜ். சூப்பர்ஸ்டார் முதல் பல்வேறு நடிகர்களுடன் இணைந்து பல்வேறு சூப்பர்ஹிட் படங்களை கொடுத்தவர். தொடர்ந்து நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டு அமெரிக்காவில் செட்டில் ஆனார்.

நினைவுகள் பகிர்வு

நினைவுகள் பகிர்வு

தற்போது சென்னைக்கு திரும்பிய ஜனகராஜ் கடந்த 19ம் தேதி முதல் ட்விட்டரில் இணைந்துள்ளார். தொடர்ந்து நடிகர் விவேக் குறித்த நினைவுகளை பகிர்ந்த அவர், கவுண்டமணியின் பிறந்தநாளுக்கும் வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார். இரண்டு பதிவுகளிலும் சிறப்பான பழைய புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.

பழைய நினைவுகள்

பழைய நினைவுகள்

இந்நிலையில் தற்போது அவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் நினைவுகளை பகிர்ந்துள்ளார். என்றும் சூப்பர் ஸ்டார்தான் என்றும் பழைய நினைவுகள் என்றும் அவர் தனது கேப்ஷனில் குறிப்பிட்டுள்ளார். மேலும் சூப்பர்ஸ்டார் ரஜினியுடன் தான் இருக்கும் பழைய திரைப்படத்தின் புகைப்படத்தையும் இணைத்துள்ளார்.

காமெடி ட்ரீட்

காமெடி ட்ரீட்

சூப்பர்ஸ்டார் ரஜினி மற்றும் ஜனகராஜ் கூட்டணி 80களின் இறுதி மற்றும் 90களின் துவக்கத்தில் சிறப்பாக அமைந்தது. இருவரும் இணைந்து நடித்த அண்ணாமலை, ராஜாதிராஜா, பணக்காரன், படிக்காதவன் உள்ளிட்ட படங்கள் ரசிகர்களுக்கு காமெடி ட்ரீட் கொடுத்தது.

பிரபலமான கூட்டணி

பிரபலமான கூட்டணி

அருணாச்சலம் படத்தின் தங்கச்சிய நாய் கடிச்சிடுச்சிப்பா என்ற காமெடி வசனம் இருவரின் கூட்டணியில் மிகவும் பிரபலமானது. தன்னுடைய பாடி லாங்குவேஜிலேயே பார்ப்பவர்களுக்கு காமெடியை வரவழைக்கும் வல்லமை கொண்டவராக ஜனகராஜ் இருந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X