சின்ன கதாபாத்திரம்தான்... ஆனா ரொம்ப பிடிச்சுருந்துச்சு... ஜனகராஜ் ஹாப்பி அண்ணாச்சி!
சென்னை : நீண்ட நாட்களுக்கு பிறகு விஜய் சேதுபதியின் 96 படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் தோன்றியிருந்தார் நடிகர் ஜனகராஜ்.
இந்த படத்தில் தன்னுடைய கேரக்டர் சிறியதாக இருந்தாலும் தனக்கு மிகவும் பிடித்திருந்ததாக அவர் தற்போது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அந்த படம் உங்களில் எத்தனை பேருக்கு பிடிக்கும் என்றும் ரசிகர்களிடையே கேள்வி எழுப்பியுள்ளார்.

சிறப்பான படங்கள்
கடந்த 1977ல் கிழக்கே போகும் ரயில் படம் மூலமாக சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் ஜனகராஜ். தொடர்ந்து சிறப்பான பல்வேறு படங்களில் நடித்துள்ள ஜனகராஜ், ரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்ற முன்னணி ஹீரோக்களின் படங்களில் அவர்களுக்கு இணையாக நடித்துள்ளார்.

மலரும் நினைவுகள்
தொடர்ந்து பல்வேறு சிறப்பான படங்களில் நடித்துவந்த ஜனகராஜ் ஒரு காலகட்டத்தில் அமெரிக்காவில் செட்டில் ஆனார். தற்போது மீண்டும் இந்தியா திரும்பியுள்ள ஜனகராஜ், மீண்டும் திரைப்படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். ட்விட்டர் பக்கத்திலும் இணைந்து அவ்வப்போது தனது மலரும் நினைவுகளை ரசிகர்களுடன் பகிர்ந்து வருகிறார்.

பிடித்த கேரக்டர்
சமீபத்தில் இவரது நடிப்பில் வெளிவந்த படங்களில் 96 முக்கியமான படமாக அமைந்துள்ளது. இதில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் நல்ல விமர்சனங்களை பெற்றுள்ளார். இந்நிலையில் சிறிய கதாபாத்திரமாக இருந்தாலும் அந்த படத்தில் தன்னுடைய கேரக்டர் மிகவும் பிடித்திருந்ததாக அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

எத்தனை பேருக்கு பிடிக்கும்?
மேலும் அந்த படம் உங்களில் எத்தனை பேருக்கு பிடிக்கும் என்றும் ரசிகர்களிடமும் கேள்வி எழுப்பியுள்ளார். கூடவே அந்த படத்தின் காட்சியையும் புகைப்படமாக அந்த பதிவில் பதிவிட்டுள்ளார். விஜய் சேதுபதியும் அவரும் அருகருகில் அமர்ந்து பேசிக் கொண்டிருப்பதாக அமைந்துள்ள புகைப்படம் அது.


Click it and Unblock the Notifications











