பிறந்த நாளில் டிவிட்டரில் இணைந்த பிரபல நடிகர்.. வரவேற்கும் சினிமா நட்சத்திரங்கள்!
சென்னை: பிரபல நடிகரான ஜனகராஜ் தனது பிறந்த நாளில் டிவிட்டர் சமூக வலைதளத்தில் இணைந்துள்ளார்.
தமிழ் சினிமாவில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருப்பவர் நடிகர் ஜனகராஜ். தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு மற்றும் இந்தி படங்களிலும் நடித்துள்ளார்.
ஆடிட்டர் ஜென்ரல் அலுவலகத்தில் அசிஸ்டன்ட் கிளர்க்காக பணியில் சேர்ந்த அவர், சினிமா மீது கொண்ட ஆர்வத்தால் மேடை நாடகங்களில் நடிக்க தொடங்கினார்.

கிழக்கே போகும் ரயில்
பின்னர் பாரதிராஜாவிடம், அசிஸ்டன்ட்டாக சேர்ந்தார் ஜனகராஜ். அப்போது அவரது திறமையை பார்த்த பாரதிராஜா, கிழக்கே போகும் ரயில் படத்தில் நடிக்க அவருக்கு வாய்ப்பு கொடுத்தார். இப்படிதான் சினிமா வாழ்க்கையை தொடங்கினார் நடிகர் ஜனகராஜ்.

நிழல்கள் படம்
தொடர்ந்து புதிய வார்ப்புகள் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்தார் ஜனகராஜ். 1980ல் வெளியான பாரதிராஜாவின் நிழல்கள் படம் அவருக்கு ஒரு பெரும் பிரேக்கை கொடுத்தது.

முன்னணி இயக்குநர்கள்
தொடர்ந்து சிவகுமார், ரஜினிகாந்த், கமல்ஹாசன், ராம்கி, சிவாஜி கணேசன் என முன்னணி நடிகர்களின் படங்களில் இணைந்து நடித்தார் ஜனகராஜ். மேலும் மணிரத்னம், கே.பாலச்சந்தர் உள்ளிட்ட இயக்குநர்களின் படங்களிலும் வாய்ப்புகள் கிடைத்தன.

கடைசியாக தாதா 87
நீண்ட இடைவெளிக்கு பிறகு கடந்த 2018ஆம் ஆண்டு விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் வெளியான 96 படத்தில் வாட்ச்மேன் கதாப்பாத்திரத்தில் நடித்தார் ஜனகராஜ். இதில் அவரது கதாப்பாத்திரம் பேசப்பட்ட நிலையில் கடைசியாக தாதா 87 படத்தில் நாயுடு கதாப்பாத்திரத்தில் நடித்தார்.

டிவிட்டரில் இணைந்த நடிகர்
இந்நிலையில் தன்னுடைய பிறந்த நாளை முன்னிட்டு டிவிட்டர் சமூக வலைதளத்தில் இணைந்துள்ளார் நடிகர் ஜனகராஜ். இதனை தனது டிவிட்டர் பக்கத்தில் அவரே அறிவித்துள்ளார்.

ஜார்ஜ் மரியான்
இதனை பார்த்த நடிகர்கள் ஷாந்தனு பாக்யராஜ் மற்றும் ஜார்ஜ் மரியான் ஆகியோர் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வரவேற்றுள்ளனர். இதுதொடர்பான நடிகர் ஜார்ஜ் மரியான் பதிவிட்டுள்ள டிவிட்டில், பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஐயா. எங்களைப் போன்ற கதாபாத்திர கலைஞர்களுக்கு நீங்கள் ஒரு பெரிய உத்வேகம் என குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











