கவுண்டமணி என்ஜாய்.. காமெடி லெஜண்டின் 82வது பிறந்தநாள்.. சூப்பராக வாழ்த்திய நண்பர் ஜனகராஜ்!
சென்னை: சுப்ரமணியன் கருப்பையாவாக 1939ம் ஆண்டு மே 25ம் தேதி பிறந்த காமெடி லெஜண்ட் சினிமாவில் கவுன்ட்டர்கள் கொடுத்து கவுண்டமணியாக பிரபலமானார்.
நகைச்சுவை நடிகர் கவுண்டமணியின் 82வது பிறந்தநாளை தமிழ் சினிமா ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
சமீபத்தில் ட்விட்டரில் இணைந்த நகைச்சுவை நடிகர் ஜனகராஜ் தனது நண்பர் கவுண்டமணிக்கு தனது ஸ்டைலில் பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறியுள்ளார்.

காமெடி லெஜண்ட்
தமிழ் சினிமாவை தவிர உலகில் வேறு எந்த சினிமா துறையிலும் இத்தனை காமெடி ஜாம்பவான்கள் இருப்பார்களா? என்று யோசித்து பார்த்தால், இந்த அளவுக்கு இல்லை என்கிற பதில் தான் வரும். 1964ல் வெளியான சர்வர் சுந்தரம் படத்தில் டிரைவராக அறிமுகமான இவர், 16 வயதினிலே படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து கலக்கினார். 80, 90களில் தனது நகைச்சுவை திறமையால் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் சிரிக்க வைத்தவர் கவுண்டமணி.

கவுண்டமணி செந்தில்
கவுண்டமணி, செந்தில் காமெடிக்கு என்றே தனியாக ஓடிய படங்கள் என தனி லிஸ்ட் ஒன்றே போடலாம் அந்த அளவுக்கு இவர்களது காமெடி டிராக் இன்றளவும் பல காமெடி சேனல்களை நடத்தவும், மக்களை மகிழ்ச்சியாக வைத்திருக்கவும் உதவி வருகிறது.

பிறந்தநாள் வாழ்த்து
காமெடி கிங் கவுண்டமணியின் 82வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில், ஏகப்பட்ட ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் கவுண்டமணிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். சமீபத்தில் கோவிட் ஒரு பொல்லாத நோய் என கவுண்டமணி கூறியிருந்தது அனைத்து ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தது.

கவுண்டமணி என்ஜாய்
சமீபத்தில் ட்விட்டரில் இணைந்த நகைச்சுவை நடிகர் ஜனகராஜ், தனது ட்விட்டர் பக்கத்தில், "எனது மனம் நிறைந்த நண்பர் கவுண்டமணிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்" என்றும் கவுண்டமணி என்ஜாய் என்றும் தனது ஸ்டைலில் பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி வைரலாக்கி உள்ளார்.


Click it and Unblock the Notifications











