வெள்ளைக்காரரிடம் மொக்கை வாங்கும் ஜனகராஜ்... கலக்கல் அண்ணாமலை காமெடி வீடியோ

சென்னை : நடிகர் ரஜினிகாந்த், குஷ்பூ, ஜனகராஜ் உள்ளிட்டவர்கள் லீட் கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் அண்ணாமலை.

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்தின் சினிமா கேரியரில் திருப்புமுனையை ஏற்படுத்திய இந்த படம் வெளியாகி 20 ஆண்டுகளை தற்போது கடந்துள்ளது.

இந்நிலையில் இந்த படத்தில் வெள்ளைக்காரர் ஒருவரிடம் மொக்கை வாங்கும் காமெடியை காமெடி நடிகர் ஜனகராஜ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

சிறப்பான படம்

சிறப்பான படம்

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், சரத்பாபு, குஷ்பூ, ராதாரவி, மனோரமா உள்ளிட்டவர்கள் லீட் கதாபாத்திரங்களில் நடித்து கடந்த 1992ல் வெளிவந்த படம் அண்ணாமலை. ரஜினியின் கேரியரில் இந்த படம் சிறப்பான திருப்புமுனையை ஏற்படுத்தியது. நண்பர்களாக இருக்கும் இருவரின் வாழ்க்கையில் சூழ்நிலை ஏற்படுத்தும் மாற்றங்களை கதைக்கருவாக கொண்டு இந்த படம் வெளியானது.

கவிதாலயா தயாரிப்பு

கவிதாலயா தயாரிப்பு

சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் கவிதாலயா பிலிம்ஸ் படத்தை தயாரித்திருந்தது. இந்த படம் வெளியாகி 20 ஆண்டுகளை கடந்துள்ள போதிலும், படத்தின் ஒவ்வொரு காட்சிகளும் மீண்டும் பார்க்கத் தூண்டும் வகையில் உள்ளன. படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் ஜனகராஜ் நடித்திருந்தார்.

காமெடி காட்சி வெளியீடு

காமெடி காட்சி வெளியீடு

இந்நிலையில் அண்ணாமலையில் தான் நடித்துள்ள காமெடி காட்சியை அவர் தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். வெள்ளைக்காரர் ஒருவரிடம் மெனக்கெட்டு, டீக்கடையின் டிஷ்கள் குறித்து அவர் ஆங்கிலத்தில் விளக்கம் அளிக்க அவரோ, ஒரு மசால்வடை, சூடான சாயா வேண்டும் என்று கேட்க ரஜினி இதை வேடிக்கையாக பார்க்கும்படி போகும் அந்த காட்சி.

பகிரும் ஜனகராஜ்

பகிரும் ஜனகராஜ்

இதை அண்ணாமலை என்று குறிப்பிட்டு சிரிப்பு எமோஜியுடன் பதிவிட்டுள்ளார் ஜனகராஜ். தற்போது சென்னையில் உள்ள ஜனகராஜ், இரு மாதங்களுக்கு முன்பு ட்விட்டரில் இணைந்து அவ்வப்போது, பழைய நினைவுகளை மீட்டு கொண்டு வந்து ட்விட்டரில் பகிர்ந்து வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X