தங்கச்சிய நாய் கடிச்சிடுச்சி பா... மலரும் நினைவுகளில் மூழ்கிய ஜனகராஜ்

சென்னை : நடிகர் ஜனகராஜ் சமீபத்தில் ட்விட்டர் பக்கத்தில் இணைந்துள்ளார்.

அவ்வப்போது ட்விட்டரில் தனது பழைய படங்களின் நினைவுகள் மற்றும் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகிறார்.

தற்போது அவரது சிறப்பான ரசிகர்களுக்கு பிடித்தமான பழைய படத்தின் டயலாக்கை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

ரசிகர்களை கவர்ந்தவர்

ரசிகர்களை கவர்ந்தவர்

நடிகர் ஜனகராஜ் தன்னுடைய கேரியரில் பல்வேறு சிறப்பான படங்களில் நடித்துள்ளார். ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய்காந்த் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் அவர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இவரது தொடர் படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன.

சிறப்பான படங்கள்

சிறப்பான படங்கள்

முக்கியமாக இவரது டயலாக் டெலிவரியும் வடசென்னை ஸ்லாங்கும் ரசிகர்களின் விருப்பத்திற்குரிய ஒன்றாக இருந்தது. தொடர்ந்து பல்வேறு சிறப்பான படங்களில் நடித்த அவர் சிறிது காலங்களுக்கு அமெரிக்காவில் செட்டில் ஆனார். தற்போது மீண்டும் சென்னையில் செட்டில் ஆகியுள்ளார்.

பழைய நினைவுகள்

பழைய நினைவுகள்

தொடர்ந்து ட்விட்டரில் இணைந்து தன்னுடைய பழைய நினைவுகளை அவ்வப்போது பகிர்ந்து வருகிறார். மேலும் பிறந்தநாள் வாழ்த்துக்கள் உள்ளிட்டவற்றையும் பகிர்கிறார். பழைய படங்களின் புகைப்படங்களையும் பகிர்ந்து வருகிறார். இவை அவருக்கு மட்டுமின்றி ரசிகர்களுக்குமான மலரும் நினைவுகளாக காணப்படுகிறது.

எவர்கிரீன் காமெடி

எவர்கிரீன் காமெடி

இந்நிலையில் படிக்காதவன் படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்துடன் இணைந்து இவர் செய்த காமெடி எவர்கிரீனாக ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்துள்ளது. அவர் குடித்துவிட்டு என் தங்கச்சிய நாய் கடிச்சிடுச்சி பா... என்று திரும்ப திரும்ப கூறி ரஜினிகாந்தை தெறிக்க விடுவார்.

மலரும் நினைவுகள்

மலரும் நினைவுகள்

இந்நிலையில் தற்போது இந்த டயலாக்கை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும் சிரிப்பு எமோஜியையும் பகிர்ந்துள்ளார். இதன்மூலம் அவரது மலரும் நினைவுகள் மட்டுமின்றி ரசிகர்களின் பழைய நினைவுகளும் தூண்டப்பட்டுள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X