புதுப்புது அர்த்தங்கள்... விவேக்குடனான மலரும் நினைவுகளில் நடிகர் ஜனகராஜ்

சென்னை : நடிகர் ஜனகராஜ் கடந்த 19ம் தேதி தனது பிறந்தநாளில் புதிய ட்விட்டர் கணக்கை துவங்கியுள்ளார்.

இந்நிலையில் தற்போது தனது முதல் ட்வீட்டை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

முதல் ட்வீட்டே நடிகர் விவேக்குடனான மலரும் நினைவுகளாக அமைந்துள்ளது.

குணசித்திர கதாபாத்திரங்கள்

குணசித்திர கதாபாத்திரங்கள்

நடிகர் ஜனகராஜ் 80களில் மிகவும் அதிகமான திரைப்படங்களில் நடித்துள்ளார். காமெடியா, கேரக்டர் ரோலா கூப்பிடு ஜனகராஜை என்னும்படியாக அதிகமான ரோல்களில் அவர் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். குணச்சித்திர கதாபாத்திரங்களில் அதிகமான படங்களிலும் நடித்துள்ளார்.

ட்விட்டரில் புதிய கணக்கு

ட்விட்டரில் புதிய கணக்கு

அதன்பிறகு படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டார். இந்நிலையில் தற்போது சென்னையில் உள்ள அவர் கடந்த 19ம் தேதி தனது பிறந்தநாளில் ட்விட்டர் பக்கத்தில் புதிய அக்கவுண்டை துவக்கினார். பிறந்தநாளில் ட்விட்டர் பயணத்தை துவங்குவதில் மகிழ்ச்சியடைவதாகவும் தெரிவித்திருந்தார்.

புதுப்புது அர்த்தங்கள் படக்காட்சி

புதுப்புது அர்த்தங்கள் படக்காட்சி

அதை தொடர்ந்து நேற்றைய தினம் மீண்டும் அவர் ஒரு பதிவை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் நடிகர் விவேக்கின் பெயரை குறிப்பிட்டு புதுப்புது அர்த்தங்கள் படத்தில் இருவரும் இணைந்து நடித்த காட்சியின் புகைப்படத்தை இணைத்து புதுப்புது அர்த்தங்கள் என்று கேப்ஷன் வெளியிட்டுள்ளார்.

சிறப்பான கூட்டணி

சிறப்பான கூட்டணி

ஜனகராஜ் மற்றும் விவேக் இருவரும் இணைந்து சில படங்களில் நடித்துள்ளனர். இருவரின் கூட்டணியும் சிறப்பாக அமையும். குறிப்பாக புதுப்புது அர்த்தங்கள் படத்தில் இருவரும் சிறப்பாக இணைந்து நடித்துள்ளனர். அதை மறக்காமல் தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார் ஜனகராஜ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X