இயக்குனர் பத்ரியின் அடுத்த படம்..வில்லனாக மாறும் ஜெய் !

சென்னை: இயக்குனர் மற்றும் நடிகர் சுந்தர் சி ஹீரோவாக நடிக்க இருக்கும் புதிய படத்தி ல் நடிகர் ஜெய் வில்லனாக நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்த படத்தை இயக்குனர் பத்ரி இயக்க, அவ்னி மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 15ஆம் தேதி தொடங்க உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

வெற்றி தொடருமா

வெற்றி தொடருமா

இயக்குனர் பத்ரி வீராப்பு படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். வீராப்பு, ஐந்தாம் படை, கலகலப்பு, ஆக்ஷன் என சுந்தர்.சி உடன் இணைந்து பணியாற்றி வெற்றி படங்களை கொடுத்துள்ளார். இதை தொடர்ந்து இந்த கூட்டணி மீண்டும் இணைய உள்ளது.

எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

நடிகர் ஜெய் ஹீரோவாக நடித்து வந்தாலும் இன்று வரையில் சுப்ரமணியபுரம் படத்தில் ஜெய் நடித்த கதாபாத்திரம் பலருக்கும் ஃபேவரட். அதை போல ஒரு கரடு முரடான கதாபாத்திரத்தை ஜெய் இந்த படத்தில் வில்லனாக கொடுப்பார் என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

விரைவில் இணைவார்

விரைவில் இணைவார்

சுந்தர்.சி தற்போது அரண்மனை 3 படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக உள்ளார். ஆர்யா, ராஷி கண்ணா, ஆண்ட்ரியா ஆகியோர் நடிக்கும் அரண்மனை 3 படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக தெரிகிறது. இதையடுத்து சுந்தர்.சி இந்த படத்தில் இணைவார் என தெரிகிறது.

விரைவில் வெளியீடு

விரைவில் வெளியீடு

ஜெய், சுந்தர்.சி ஆகியோர் இணைந்து நடிக்கவுள்ள பெயரிடப்படாத இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு பொங்கல் தினமான ஜனவரி 15 அன்று தொடங்கும் என அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. படக்குழு பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரவுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X