ஜெயம் ரவியின் பூமி அப்டேட்: வைரலான சூட்டிங் ஸ்பாட் போட்டோ
சென்னை: நடிகர் ஜெயம் ரவி நடிக்கும் பூமி திரைப்படம் அவருக்கு 25ஆவது படமாகும். இப்படம் விவசாயத்தின் முக்கியத்தை உணர்த்தும் வகையில் எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது இப்படத்தின் பாடல் காட்சி ஒன்று நதிக்கரையின் அருகில் படமாக்கப்பட்டு வருகிறது. அப்போது படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட போட்டோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கோமாளி திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு, லக்ஷ்மன் இயக்கத்தில் பூமி திரைப்படத்தில் நடித்து வருகிறார் ஜெயம் ரவி. ஆனால், அதை விட ஸ்பெஷல் என்னவென்றால் இது ஜெயம் ரவியின் 25ஆவது படமாகும்.

இயக்குனர் லக்ஷ்மன் இதற்கு முன் இரு படங்கள் இயக்கி உள்ளார். ரோமியோ ஜுலியட் மற்றும் போகன் ஆகும். இதிலுள்ள மற்றொரு ஸ்பெஷல் என்னவென்றால் இவை இரண்டுமே ஜெயம் ரவி நடித்த படங்கள் தான். இவ்விரண்டு படங்களுமே வெற்றிப்படங்களாக அமைந்துவிட்டன.
இதனாலே, தனது 25ஆவது படத்தை இயக்கும் அரிய வாய்ப்பையும் இயக்குநர் லஷ்மனுக்கு வழங்கியுள்ளார் ஜெயம் ரவி. இந்தப்படத்தை தயாரித்து வருகின்றனர் சுஜாதா விஜயகுமாரின் ஹோம் மேக்கர்ஸ் நிறுவனம். இப்படத்திற்கு இசையமைக்கிறார் டி.இமான்.
டி.இமானுடைய இசையமைப்பில் 100ஆவது படமாக அமைந்ததும் ஜெயம் ரவி நடித்த டிக் டிக் டிக் படம் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்த படத்திற்கு பாடல் வரிகள் எழுத உள்ளனர் மதன் கார்கியும், தாமரையும். பிருந்தா மாஸ்டர் நடன இயக்குனராக படத்தில் இணைந்துள்ளார்.
பூமி படத்தின் சூட்டிங் ஸ்பாட்டில் இருந்து சில புகைப்படங்களை படக்குழு வெளியிட்டு இருக்கிறது.
அந்த புகைப்படங்களில் இயக்குநர் லஷ்மன், ஜெயம் ரவி மற்றும் பல நடனக் கலைஞர்கள் இடம்பெற்றுள்ளனர். பாடல் காட்சி படமாக்கப்பட்டு வருகிறது எனத் தெரிகிறது. ஒரு பெரிய நதிக்கரையில் பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையில் ஜெயம் ரவியின் 26ஆவது படத்தை என்றென்றும் புன்னகை மற்றும் மனிதன் படங்களை இயக்கிய அஹமத் இயக்க உள்ளதாக சினிமா வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. ஜனவரியில் அஹமத் படத்தின் வேலைகள் துவங்கும் என நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications











