ஜெயம் ரவி, ஆர்த்தி விவாகரத்து வழக்கு.. குடும்ப நல நீதிமன்றம் போட்ட உத்தரவு..என்னனு தெரியுமா?
சென்னை: நடிகர் ரவி மோகன் தாக்கல் செய்த விவாகரத்து வழக்கின் விசாரணை இன்று சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ரவி மற்றும் அவரின் மனைவி ஆர்த்தி தம்பதி இடையேயான சமரச பேச்சுவார்த்தை நிறைவு செய்த பின் விவாகரத்து வழக்கு விசாரிக்கப்படும் என சென்னை குடும்ப நல நீதிமன்றம் தெரிவித்துள்ளது
முன்னணி நடிகரான ஜெயம் ரவி, 2009ம் ஆண்டு ஆர்த்தியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 15 ஆண்டுகள் இருவரும் இணைந்து வாழ்ந்து வந்த நிலையில் தற்போது கருத்து வேறுபாடு காரணத்தால் தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இதையடுத்து, ரவி மோகன், தனது எக்ஸ் தள பக்கத்தில் மனைவியை பிரிவதாக அறிக்கை வெளியிட்டார். இது பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

ரவி மோகன், ஆர்த்தி: இந்த விவாகரத்து முடிவை எனது கணவர் ரவி ஒப்புதல் இல்லாமல் தன்னிச்சையாக எடுத்த முடிவு என்றும், இந்த விவாகரத்தில் எனக்கு உடன்பாடு இல்லை, நான் தனிப்பட்ட முறையில் ரவியை சந்தித்து பேச அனுமதி கேட்டும் இதுநாள் வரை அனுமதி கிடைக்கவில்லை. அவரை நான் தனிப்பட்ட முறையில் சந்தித்து பேச வேண்டும் என ஆர்த்தி கூறியிருந்தார்.
விவாகரத்து வழக்கு: இதைத்தொடர்ந்து, விவாகரத்து வழக்கு, சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் நீதிபதி தேன்மொழி முன் விசாரணைக்கு வந்தது. இதில் ஜெயம் ரவி, நேரில் ஆஜராகி இருந்த நிலையில், ஆர்த்தி காணொலி காட்சி மூலமாக ஆஜராகி இருந்தார். இருதரப்பு வாதத்தையும் கேட்ட நீதீபதி, குடும்ப நல நீதிமன்ற சமரச தீர்வு மையத்தின் மூலம் சந்தித்து பேச வேண்டும் என உத்தரவிட்டு இருந்தார்.
சமரச பேச்சுவார்த்தை: நீதிபதியின் உத்தரவைத் தொடர்ந்து, ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி இருவரும் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி சந்தித்து பேசியும் சமரச பேச்சுவார்த்தை முடிவடையவில்லை என்று மத்தியஸ்தர் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டதை தொடர்ந்து. இருவரும் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதைத்தொடர்ந்து, இந்த வழக்கின் விசாரணையை ஜனவரி 18ஆம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்
பிப் 15ந் தேதி விசாரணை: இந்நிலையில், இந்த விவாகரத்து வழக்கு குடும்ப நல நீதிமன்ற நீதிபதி தேன்மொழி முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது, அப்போது நடிகர் ரவி மற்றும் ஆர்த்தி ஆகியோர் காணொலி மூலம் ஆஜராகினர். அப்போது, நடிகர் ரவி, ஆர்த்தி இடையேயான சமரச பேச்சுவார்த்தைக்காக மத்தியஸ்தர் இன்று அழைத்திருப்பதாக அவர்களின் வழக்கறிஞர்கள் நீதிபதியிடம் தெரிவித்தனர். இதனை கேட்ட நீதிபதி, சமரச பேச்சுவார்த்தை நிறைவு செய்து பின் விவாகரத்து வழக்கின் விசாரணை நடத்தப்படும் என தெரிவித்து வழக்கின் விசாரணையை பிப்ரவரி 15 ம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.


Click it and Unblock the Notifications











