Thani Oruvan 2: 8 ஆண்டு கொண்டாட்டம்.. ஆகஸ்ட் 28ம் தேதி வெளியாகும் தனி ஒருவன் 2 அப்டேட்?

சென்னை: நடிகர் ஜெயம் ரவி மற்றும் அவரது அண்ணன் கூட்டணியில் கடந்த 2015ம் ஆண்டில் வெளியாகி வெற்றி கொடுத்தது தனி ஒருவன்.

போலீஸ் அதிகாரியாக ஜெயம் ரவி நடித்திருந்த இந்தப் படத்தில் அவருக்கு ஜோடி சேர்ந்திருந்தார் நயன்தாரா.

இந்தப் படத்தின் இரண்டாவது பாகம் குறித்து கடந்த சில மாதங்களுக்கு முன்னதாகவே அப்டேட் தெரிவித்திருந்தார் ஜெயம் ரவி.

Actor Jayam Ravi and Director Raja combination movie Thani oruvan 2 update expected on 28th of this month

ஆகஸ்ட் 28ம் தேதி எதிர்பார்க்கப்படும் தனி ஒருவன் 2 பட அறிவிப்பு: நடிகர் ஜெயம் ரவி, நயன்தாரா, அரவிந்த் சாமி உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2015ம் ஆண்டில் வெளியாகி சூப்பர் ஹிட்டடித்த படம் தனி ஒருவன். இந்தப் படத்தை ஜெயம் ரவியின் அண்ணன் ராஜா இயக்கியிருந்தார். படத்தில் ஹீரோ, ஹீரோயின் மட்டுமில்லாமல் வில்லனாக நடித்த அரவிந்த் சாமியின் சித்தார்த் அபிமன்யு கேரக்டரும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. படத்தில் ஜெயம் ரவி -அரவிந்த் சாமி இருவரின் காட்சிகள் சிறப்பாக அமைந்தது.

இந்தப் படத்தின் இரண்டாவது பாகம் குறித்து தொடர்ந்து ரசிகர்கள் விருப்பம் தெரிவித்து வந்தனர். இதனிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனி ஒருவன் 2 படம் குறித்து அப்டேட் தெரிவித்திருந்தார் ஜெயம் ரவி. முன்னதாகவே இந்தப் படம் திட்டமிடப்ட்டிருந்த நிலையில், தான் பொன்னியின் செல்வன் படத்தின் சூட்டிங்கில் இணைந்திருந்ததால், படம் தாமதமானதாகவும் கூறியிருந்தார். விரைவில் படம் குறித்து அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறியிருந்தார்.

இந்நிலையில் தனி ஒருவன் 2 படத்தை இயக்க தான் மிகுந்த எதிர்பார்ப்புடனும் ஆர்வத்துடனும் காத்திருப்பதாகவும் இந்தப் படம் குறித்து இயக்குநர் ராம், தன்னுடைய ஆர்வத்தை தெரிவித்ததாகவும் ஜெயம் ராஜா தன்னுடைய ட்விட்டரில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தெரிவித்திருந்தார். இந்தப் படத்திற்கான வேலைகளை தற்போது ராஜா செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் இந்தப் படத்தின் அப்டேட் வரும் 28ம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 2015ம் ஆண்டு ஆகஸ்ட் 28ம் தேதிதான் தனி ஒருவன் படம் திரையரங்குகளில் வெளியாகி வெற்றி பெற்றது. இந்நிலையில் வரும் 28ம் தேதி இந்தப் படம் வெளியாகி 8 ஆண்டுகளை பூர்த்தி செய்யவுள்ளது. இந்நிலையில் அன்றைய தினம் தனி ஒருவன் படத்தின் இரண்டாவது பாகம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. முதல் பாகத்தில் ஜெயம் ரவி, நயன்தாரா மற்றும் அரவிந்த் சாமி இணைந்து மாஸ் காட்டினர்.

இந்நிலையில், இதே கூட்டணியில் படம் வெளியாகுமா அல்லது நடிகர்களின் தேர்வில் மாற்றம் இருக்குமா என்று ரசிகர்களிடையே கேள்வி எழுந்துள்ளது. எதுவாக இருந்தபோதிலும் இன்னும் சில தினங்களில் இந்தப் படத்தின் அப்டேட் வெளியாகும்போது, ரசிகர்களின் கேள்விகளுக்கு விடை கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம். ஜெயம் ரவி மற்றும் ராஜாவின் கூட்டணியில் வெளியான அனைத்து படங்களும் மிகச்சிறந்த வெற்றி பெற்று வருகிறது. அந்த பட்டியலில் தனி ஒருவன் 2 படமும் இணையும் என்றும் எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X