சைமா விருது வாங்கிய அப்பா மகன் - கொண்டாட்டத்தில் ஜெயம் ரவி ரசிகர்கள்
Recommended Video
சென்னை: அடங்கமறு படத்தில் நடித்ததற்காக ஜெயம் ரவிக்கும், டிக் டிக் டிக் படத்தில் நடித்த அவருடைய மகன் ஆரவ்விற்கும் ஒரே சமயத்தில் விருது கிடைத்துள்ளது ஜெயம் ரவியின் ரசிகர்களையும், இவரின் குடும்பத்தினரையும் சந்தோசத்தில் ஆழ்த்தியுள்ளது.
நிமிர்ந்து நில், தனியொருவன், அடங்க மறு என படத்துக்கு படம் வித்தியாசம் காட்டி நடிப்பதால் தான் நடிகர் ஜெயம் ரவி தமிழ்த் திரையுலகில் அனைவராலும் கவனிக்கப்படுகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த அடங்கமறு படத்திற்கு சைமா விருது கிடைத்துள்ளது.

திரைப்பட கலைகர்களுக்கு வழங்கப்படும், விருதுகளில் ஒன்று சைமா (SIIMA) விருதுகள். இந்த தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது வழங்கும் நிகழ்ச்சி, கத்தாரில் நடைபெற்றது. பல்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்க பட்டது.
இந்த விழாவில், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழி சினிமாக்களில் நடித்த பல கலைஞர்கள் கலந்து கொண்டனர். தமிழ் படங்கள் பல விருதுகளை அள்ளிக் கொண்டது பெருமையான விஷயம்.
சிறந்த படம், சிறந்த இயக்குனர், சிறந்த நடிகர் என பல்வேறு பட்டியலின் அடிப்படையில் விருதுகள் வழங்கப்பட்டன. இதில் சிறந்த தமிழ் நடிகருக்கான விருதை நடிகர் தனுஷும், சிறந்த நடிகைக்கான திரிஷாவும் பெற்றனர்.
மேலும் விமர்சன ரீதியாக சிறந்த நடிகருக்கான விருது அடங்கமறு படத்தில் நடித்த ஜெயம் ரவிக்கு வழங்கப்பட்டது. அதேபோல், டிக் டிக் டிக் படத்தில் நடித்ததற்காக ஜெயம் ரவியின் மகன் ஆரவ், சிறந்த குழந்தை நட்சத்திரமாக தேர்வு செய்யப்பட்டார்.
இந்தப் படம் வெளியானபோதே அனைவருமே இப்படம் நிச்சயம் விருது பெறும் என்று உறுதியாகக் கூறினர். தற்போது சொன்னது போலவே விருது கிடைத்துள்ளது ஜெயம் ரவியை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அப்பாவும் பிள்ளையும் ஒரே யூனிஃபார்மில் கோட் சூட் அணிந்த படி மேடை ஏறி பார்வையாளர்கள் அனைவரையும் பரவசப்படுத்தினர். ஒரு அப்பாவுக்கு இதை விட என்ன பெருமை வேண்டும் என்கிற தருணம் அது தான்.
அப்பா மகன் என இருவருக்குமே, சைமா விருது வழங்கப்பட்டது. ஜெயம் ரவி ரசிகர்களையும், அவருடைய குடும்பத்தினரையும் மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. இதற்கு திரையுலக பிரமுகர்கள் பலரும் தொடந்து தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
வரும் காலங்களில், நல்ல கதைகள் அமைந்தால் ஜெயம் ரவியின் மகன் இன்னும் பல படங்கள் நடிப்பார் என்று அவரது குடும்பத்தார் தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











