Thani oruvan 2: ஆகஸ்ட் 28ல் வெளியாகும் தனி ஒருவன் 2 அறிவிப்பு.. சூட்டிங் எப்ப தெரியுமா?

சென்னை: நடிகர் ஜெயம் ரவி, நயன்தாரா உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த 2015ம் ஆண்டில் வெளியானது தனி ஒருவன் படம். ஜெயம் ராஜா இயக்கியிருந்தார்.

இந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த நிலையில், படத்தின் இரண்டாவது பாகத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே தொடர்ந்து இருந்தது.

Actor Jayam ravi and Mohan raja joined for Thani Oruvan 2 and the announcement will commence on August 28th

தனி ஒருவன் படம் ஜெயம் ரவி மற்றும் மோகன் ராஜா கேரியரில் திருப்புமுனையை ஏற்படுத்திய நிலையில் அடுத்ததாக தனி ஒருவன் 2 படம் உருவாகவுள்ளது.

ஜெயம் ரவி -மோகன் ராஜா கூட்டணியில் தனி ஒருவன் 2 படம்: நடிகர் ஜெயம் ரவி மற்றும் அவரது அண்ணன் மோகன் ராஜா கூட்டணியில் கடந்த 2015ம் ஆண்டில் வெளியானது தனி ஒருவன் படம். விஜய்யின் வேலாயுதம் படத்தை வெற்றிப்படமாக்கிய மோகன் ராஜாவின் இயக்கத்தில் இந்தப் படம் வெளியானது. இருவரின் கேரியரில் இந்தப் படம் சிறப்பான திருப்புமுனையை ஏற்படுத்தியது- இந்நிலையில் 8 ஆண்டுகள் கழித்து இந்தப் படத்தின் இரண்டாவது பாகத்தை உருவாக்க இருவரும் தயாராகியுள்ளனர். முன்னதாக இந்தப் படம் குறித்து இருவரும் அடுத்தடுத்த அப்டேட்களை வெளியிட்டுள்ளனர்.

தனி ஒருவன் படத்தில் ஜெயம் ரவியுடன் நயன்தாரா, அரவிந்த் சாமி என சிறப்பான கூட்டணி அமைந்தது. பாடல்களும் படத்தின் வெற்றிக்கு சிறப்பான பங்களிப்பை கொடுத்தது. இந்நிலையில் படத்தின் இரண்டாவது பாகத்தின் சூட்டிங்கை கடந்த 2018ம் ஆண்டிலேயே துவக்க திட்டமிடப்பட்டது. ஆனால் அந்த நேரத்தில் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்க, ஜெயம் ரவிக்கு அழைப்பு வந்ததால், தனி ஒருவன் 2 படத்தின் சூட்டிங் தாமதமானது.

மேலும் ஜெயம் ரவி, எம் ராஜேஷ் படம், அகமத் படம் மற்றும் சைரன் என அடுத்தடுத்தப் படங்களில் பிசியாக நடித்துவருகிறார். இதேபோல தெலுங்கில் லூசிபர் படத்தை இயக்கி வெற்றிப்படமாக்கினார் மோகன் ராஜா. தொடர்ந்து தற்போது நாகார்ஜூனாவை இயக்கி வருகிறார். அவரும் ஒரு பக்கம் பிசியான நிலையில், தனி ஒருவன் 2 படத்தின் சூட்டிங் தொடர்ந்து தாமதமாகி வருகிறது. இந்நிலையில் இந்தப் படத்தின் வேலைகளை தற்போது படக்குழுவினர் துவங்கியுள்ளனர்.

Actor Jayam ravi and Mohan raja joined for Thani Oruvan 2 and the announcement will commence on August 28th

இந்தப் படத்தின் டெஸ்ட் சூட், இன்றைய தினம் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் வரும் ஆகஸ்ட் 28ம் தேதி படத்தின் அறிவிப்பு ப்ரமோவுடன் வெளியாகவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக படத்தின் முதல் பாகம் கடந்த 2015ம் ஆண்டு ஆகஸ்ட் 28ம் தேதி ரிலீசான நிலையில், அதே நாளில் தற்போது இரண்டாவது பாகத்தின் அறிவிப்பு வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்தப் படம் கடந்த 2018ம் ஆண்டிலேயே துவங்கவிருந்த நிலையில் அந்த நேரத்தில் மோகன் ராஜா மற்றும் ஜெயம் ரவி வெளியிட்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் டிரெண்டாகியுள்ளது.

இதனிடையே வரும் ஆகஸ்ட் 28ம் தேதி படத்தின் 8வது ஆண்டு கொண்டாட்டத்தையொட்டி தனி ஒருவன் 2 படத்தின் புதிய வீடியோவை இவர்கள் இருவரும் வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. படத்தில் நயன்தாரா ஜெயம் ரவிக்கு ஜோடியாகவுள்ளது ஏறக்குறைய உறுதியாகியுள்ள நிலையில், முதல் பாகத்தில் மிரட்டிய அரவிந்த் சாமி இந்தப் படத்தில் இணைவாரா என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X