அருண்மொழி வர்மனின் வெற்றி.. மீண்டும் துவங்கப்படுமா சுந்தர் சியின் சங்கமித்ரா?

சென்னை : நடிகர் ஜெயம்ரவியின் நடிப்பில் பொன்னியின் செல்வன் படம் இரு தினங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

இந்தப் படத்தில் பொன்னியின் செல்வராக மிரட்டலான நடிப்பால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளார் ஜெயம் ரவி.

அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்துவரும் ஜெயம்ரவியின் நடிப்பில் அடுத்தடுத்தப் படங்கள் உருவாகி வருகின்றன.

நடிகர் ஜெயம்ரவி

நடிகர் ஜெயம்ரவி

நடிகர் ஜெயம் ரவி, ஜெயம் என்ற படம் மூலம் தன்னுடைய அண்ணன் ஜெயம் ராஜாவின் இயக்கத்தில் அறிமுகமானார். முன்னதாக சிறுவயதில் தெலுங்கிலும் இவர் நடித்துள்ளார். ஜெயம்ரவி இவருக்கு சிறப்பான அறிமுகத்தை கொடுத்த நிலையில், அடுத்தடுத்து எம் குமரன் சன் ஆப் மகாலட்சும போன்ற படங்கள் ஏற்றத்தை கொடுத்தன.

அதிரடி படங்கள்

அதிரடி படங்கள்

சாக்லேட் பாயாகவே நடித்துவந்த ஜெயம் ரவி, தொடர்ந்து அதிரடி படங்களிலும் தன்னை இணைத்துக் கொண்டார். தன்னுடைய அண்ணனின் இயக்கத்தில் மட்டுமில்லாமல் மற்ற இயக்குநர்களுடனும் கைக்கோர்த்து வருகிறார் ஜெயம் ரவி. பேராண்மை உள்ளிட்ட படங்களில் சமூக நலத்தை வெளிப்படுத்தும் கேரக்டர்களிலும் நடித்திருந்தார்.

தனியொருவன் படம்

தனியொருவன் படம்

அவ்வப்போது தன்னுடைய அண்ணனின் இயக்கத்திலும் நடித்துவரும் ஜெயம்ரவி சமீபத்தில் தனியொருவன் படத்திலும் நடித்திருந்தார். படத்தில் நயன்தாரா, அரவிந்த் சாமி உள்ளிட்டவர்கள் நடித்திருந்த நிலையில் படம் பிளாக் பஸ்டர் ஹிட்டடித்தது. படத்தின் இரண்டாவது பாகம் விரைவில் துவங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பொன்னியின் செல்வன் படம்

பொன்னியின் செல்வன் படம்

இந்நிலையில் ஜெயம்ரவியின் பொன்னியின் செல்வன் படம் இரு தினங்களுக்கு முன்பு வெளியாகி அவருக்கு நல்ல விமர்சனங்களை பெற்றுத் தந்துள்ளது. படத்தில் பொன்னியின் செல்வனாக, அருண் மொழி வர்மனாக மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இரண்டாம் பாதியில்தான் இவரது அறிமுகம் படத்தில் இருந்தாலும் க்ளைமாக்ஸ் காட்சியில் மிரட்டியுள்ளார்.

சுந்தர் சியின் சங்கமித்ரா

சுந்தர் சியின் சங்கமித்ரா

இதனிடையே சில ஆண்டுகளுக்கு முன்பு தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் சுந்தர் சி இயக்கத்தில் துவங்கிய படத்தில் ஜெயம் ரவி, ஸ்ருதி ஹாசன், ஆர்யா உள்ளிட்டவர்கள் நடித்து வந்தனர். இந்தப் படம் நிதி நெருக்கடி காரணமாக நிறுத்தப்பட்டது. வரலாற்று பின்புலத்தல் மிகவும் பிரம்மாண்டமாக இந்தப் படம் உருவாகி வந்தது. இசையமைப்பாளராக ஏஆர் ரஹ்மான் கமிட்டாகியிருந்தார்.

மீண்டும் துவங்கப்படுமா?

மீண்டும் துவங்கப்படுமா?

இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்தில் ஜெயம்ரவியின் கேரக்டர் தற்போது மிகுந்த வரவேற்பை பெற்றுள்ள நிலையில், சங்கமித்ரா படம் மீண்டும் தூசி தட்டப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 4 ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் படம் திட்டமிடப்பட்ட நிலையில், தற்போது வரலாற்றுப் படங்கள் ட்ரெண்டிங்கில் உள்ள நிலையில், படம் உருவாக்கப்பட்டால் மிகச்சிறந்த வரவேற்பை பெறும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X