ஜெயம் ரவி: ஆர்த்தியுடன் பிரிவை அறிவித்த ஜெயம் ரவி.. நெஞ்சம் கசந்த தனிப்பட்ட முடிவு என உருக்கம்!

சென்னை: நடிகர் ஜெயம் ரவி பல ஆண்டுகளை கடந்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக இருந்து வருகிறார். ஆர்த்தி என்பவரை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார் ஜெயம் ரவி. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ள நிலையில், நீண்ட காலங்களாகவே இவர்கள் பிரிய உள்ளதாக தகவல்கள் வெளியாகிவந்தது.

இது குறித்து இருவரும் மௌனம் காத்து வந்த நிலையில், தற்போது தான் ஆர்த்தியிடம் இருந்து விவாகரத்து பெறப் போவதாக ஜெயம் ரவி அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அவரது இந்த முடிவு அவரது நெருங்கிய சொந்தங்கள் மற்றும் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

jayam ravi aarthi tamil cinema

நடிகர் ஜெயம் ரவி: நடிகர் ஜெயம் ரவியின் திரைப்பயணம் ஜெயம் படத்தில் துவங்கியது. அவரது அண்ணன் மோகன் ராஜா இயக்கத்திலேயே ஜெயம் படத்தில் நடித்திருந்தார் ஜெயம் ரவி. முதல் படத்திலேயே ஆக்ஷன், காமெடி, காதல், சென்டிமெண்ட் போன்ற பல விஷயங்களை கோர்வையாக இந்தப் படத்தில் இணைத்தது இந்த காம்பினேஷன். தொடர்ந்து சாக்லேட் பாய் கேரக்டர்களிலும் அதிரடி ஆக்ஷன் ஹீரோவாகவும் காமெடி களத்திலும் அதகளம் செய்து வருகிறார் ஜெயம் ரவி. அடுத்தடுத்து அவரது பிரதர், ஜெனீ, காதலிக்க நேரமில்லை படங்கள் ரிலீசுக்கு தயாராகவுள்ள நிலையில், பிரதர் படம் தீபாவளி ரிலீசாக வெளியாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

jayam ravi aarthi tamil cinema

ஜெயம் ரவி -ஆர்த்தி ஜோடி: ஆர்த்தி என்பவரை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார் ஜெயம் ரவி. இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ள நிலையில், மிகவும் மனமொத்த தம்பதியாக இவர்கள் கோலிவுட்டில் கொண்டாடப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் இவர்களுக்குள் மனக்கசப்பு ஏற்பட்டுள்ளதாகவும் விரைவில் பிரிய முடிவெடுத்துள்ளதாகவும் சமூக வலைதளங்களில் தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வந்தன. இதற்கு ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி இருவரும் எந்தவிதமான ரியாக்ஷனும் கொடுக்காமல் மௌனம் சாதித்து வந்தனர். இருவரும் அவ்வப்போது சேர்ந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்றதையும் தனியாக தன்னுடைய மகன்களுடன் வெளிநாட்டிற்கு பயணம் செய்ததையும் பார்க்க முடிந்தது.

jayam ravi aarthi tamil cinema

ஆர்த்தியுடன் ஜெயம் ரவி பிரிவு அறிவிப்பு: இதனால் இவர்கள் விஷயத்தில் எந்தவிதமான முடிவும் எடுக்க முடியாமல் ரசிகர்கள் யோசித்துவந்த நிலையில் இன்றைய தினம் ஆர்த்தியிடம் இருந்து விவாகரத்து பெறவுள்ளதாக தற்போது ஜெயம் ரவி தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் அறிவித்துள்ளார். மிகவும் நெஞ்சம் கசந்த ஒரு தனிப்பட்ட தகவலை சமூக ஊடக நண்பர்கள் மற்றும் ரசிகர்களிடம் பகிர்ந்துக் கொள்வதாக ஜெயம் ரவி அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார். வாழ்க்கை என்பது பல்வேறு அத்தியாயங்களை கொண்ட ஒரு பயணம் என்றும் தன்னுடைய பல்வேறு விஷயங்களை எப்போதும் நேர்மையுடன் பகிர்ந்து வருவதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

jayam ravi aarthi tamil cinema

கடினமான முடிவு என உருக்கம்: நீண்டகால யோசனை மற்றும் பரிசீலனைக்கு பிறகு ஆர்த்தி உடனான தனது திருமண வாழ்க்கையிலிருந்து விலகும் கடினமான முடிவை எடுத்துள்ளதாகவும் ஜெயம் ரவி குறிப்பிட்டுள்ளார். தன்னை சார்ந்தவர்களின் நலன் மற்றும் நல்வாழ்க்கையை கருத்தில் கொண்டு இந்த கடினமான முடிவை தான் எடுத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த நேரத்தில் தன்னுடைய தனியுரிமை மற்றும் தன்னை சேர்ந்தவர்களின் தனியுரிமைகளுக்கு மதிப்பளிக்கும்படியும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இது தன்னுடைய தனிப்பட்ட முடிவு என்றும் தான் எப்போதும் தன்னுடைய நடிப்பின்மூலம் ரசிகர்களை மகிழ்விக்கவே முன்னுரிமை கொடுப்பேன் என்றும் ஜெயம் ரவி தெரிவித்துள்ளார். தொடர்ந்து தனக்கு ஆதரவு தெரிவித்துவரும் ரசிகர்களுக்கு ஜெயம் ரவி நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X