தீர்ந்தது சிக்கல்.. மார்ச் 10ல் ரிலீசாகும் அகிலன்.. ஜெயம்ரவி அறிவிப்பு!
சென்னை : பூலோகம் படத்தில் இணைந்த என் கல்யாண கிருஷ்ணன் -ஜெயம் ரவி கூட்டணியில் உருவாகியுள்ள படம் அகிலன்
அகிலன் படம் ரிலீசாவதில் இருந்த சிக்கல் தீர்ந்த நிலையில், படம் ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
படம் வரும் மார்ச் 10ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளதாக படத்தின் நாயகன் ஜெயம் ரவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

நடிகர் ஜெயம் ரவி
கடந்த ஆண்டில் ஜெயம் ரவியின் பொன்னியின் செல்வன் படம் ரிலீசானது. இந்தப் படத்தில் முக்கியமான கேரக்டரில் ஜெயம் ரவி நடித்திருந்தார். மணிரத்னம் இயக்கத்தில் ஜெயம் ரவி இணைந்திருந்த வரலாற்றுப் படமான பொன்னியின் செல்வன் படத்தை தொடர்ந்து ஜெயம் ரவி நடிப்பில் அகிலன், இறைவன் படங்கள் அடுத்தடுத்து ரிலீசுக்கு தயாராகி வருகின்றன.

தனி ஒருவன் 2 படத்தில் ஜெயம் ரவி
இந்தப் படங்களை தொடர்ந்து தன்னுடைய அண்ணன் ஜெயம் ராஜா இயக்கத்தில் தனி ஒருவன் 2 படத்திலும் நடிக்கவுள்ளார் ஜெயம் ரவி. இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கவுள்ளார். இதேபோல இறைவன் படத்திலும் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நயன்தாரா கமிட்டாகியுள்ளார்.

அகிலன் பட ரிலீஸ்
இதனிடையே ஜெயம் ரவி நடிப்பில் அடுத்தடுத்து 3 படங்களை தயாரிக்கவுள்ள ஸ்கிரீன் சீன் நிறுவனத்தின் முதல் தயாரிப்பான அகிலன் படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பை படக்குழு மேற்கொண்டுள்ளது. முன்னதாக ஜெயம் ரவியின் பூலோகம் படத்தை இயக்கியுள்ள என் கல்யாண கிருஷ்ணன் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.

இரண்டு நாயகிகள்
படத்தில் பிரியா பவானி சங்கர் மற்றும் தன்யா ரவிச்சந்திரன் ஆகியோர் நாயகிகளாக இணைந்துள்ளனர். துறைமுகத்தை மையமாக கொண்டு இந்தப் படத்தின் கதைக்களம் உருவாகியுள்ள நிலையில் தூத்துக்குடி மற்றும் சென்னை காசிமேடு ஆகிய இடங்களில் படத்தின் பெரும்பாலான சூட்டிங் நடைபெற்றுள்ளது.

தள்ளிப் போன ரிலீஸ்
கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியாகி கவனத்தை பெற்ற நிலையில், படம் கடந்த ஆண்டிலேயே வெளியாக உள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில் பல்வேறு காரணங்களால் படத்தின் ரிலீஸ் தள்ளிப் போன நிலையில், தற்போது மார்ச் 10ம் தேதி படம் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

ஜெயம் ரவி அறிவிப்பு
இதுகுறித்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜெயம் ரவியும் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். முன்னதாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு தன்னுடைய இறைவன் படத்தின் பர்ஸ்ட் லுக்கையும் அவர் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

ரிலீஸ் தள்ளிப் போக காரணம்
படத்தின் பல காட்சிகள் கடலில் படமாக்கப்பட்ட நிலையில், தடையில்லா சான்றிதழ்கள் வாங்குவதில் ஏற்பட்ட கால தாமதமே படத்தின் ரிலீசிலும் எதிரொலித்துள்ளதாக படக்குழு சார்பில் கூறப்பட்டது. இந்நிலையில், தற்போது அதை எதிர்கொண்டு படக்குழு முடித்துள்ள நிலையில், படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











