கெனிஷாவையும் என்னையும் சேர்த்துவச்சு பேசாதீங்க.. பர்சனல் விஷயங்களில் தலையிடாதீங்க.. ஜெயம் ரவி கோரிக்கை
சென்னை: நடிகர் ஜெயம் ரவி தன்னுடைய மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்யும் முடிவை கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியிட்டிருந்தார். இந்த விவகாரம் அவரது விளக்கத்துடன் மற்றும் விவாகரத்து அறிவிப்புடன் முற்றுப்பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தொடர்ந்து சமூக வலைதளங்களில் ஜெயம் ரவி பேசுபொருளாக காணப்படுகிறார்.
அவரையும் பாடகி கெனிஷாவையும் இணைத்து அடுத்தடுத்து தகவல்கள் வெளியாகி வருகின்றன. அவர் கெனிஷாவுடன் கோவாவில் தனியாக இருப்பதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் இந்த விஷயத்தில் தற்போது ஜெயம் ரவி விளக்கமளித்துள்ளார். இன்றைய தினம் பிரதர் படத்தின் ஆடியோ வெளியீட்டின்போது பேசிய ஜெயம் ரவி வாழு மற்றும் வாழவிடு என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

நடிகர் ஜெயம் ரவி: கடந்த சில தினங்களுக்கு முன்பு தன்னுடைய விவாகரத்து குறித்து அறிவித்திருந்தார் நடிகர் ஜெயம் ரவி. முன்னதாக பல மாதங்களாக இவர்களின் விவாகரத்து குறித்த தகவல்கள் சமூக வலைதளங்களில் தொடர்ந்து வந்த நிலையில். அவற்றுக்கு தன்னுடைய விவாகரத்து குறித்த அறிவிப்பு மூலம் முற்றுப்புள்ளி வைத்திருந்தார் ஜெயம் ரவி. ஆனால் இந்த விவகாரம் முடியாமல் தொடர்ந்து வருகிறது. தன்னுடைய சினிமா கேரியரில் எந்தவிதமான சர்ச்சையிலும் சிக்காத நடிகர் என்ற பெயரை பெற்றிருந்த ஜெயம் ரவி, தற்போது அவற்றிற்கெல்லாம் சேர்த்து வைத்து சர்ச்சைகளில் சிக்கி வருகிறாரோ என்ற எண்ணம் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
பிரதர் இசை வெளியீட்டு விழா: விவாகரத்து குறித்து ஜெயம் ரவி தன்னிச்சையாக முடிவெடுத்ததாகவும் தன்னிடம் கலந்தாலோசிக்கவில்லை என்றும் ஆர்த்தி தெரிவித்திருந்தார். இதனிடையே, பாடகி கெனிஷாவுடன் இணைந்து ஜெயம் ரவி கோவாவில் தனியாக உள்ளதாக அடுத்தடுத்த தகவல்கள் பரவ ஆரம்பித்தன. இந்நிலையில் இன்று காலை திடீரென செய்தியாளர்களை சந்தித்த ஜெயம் ரவி, தான் விவாகரத்து நோட்டீசை அடுத்தடுத்து ஆர்த்திக்கு அனுப்பியதாகவும் தனக்கு தெரியாது என்று அவர் கூறுவதையும் மறுத்தார். இன்று காலை ஜெயம் ரவி -எம் ராஜேஷ் கூட்டணியில் உருவாகியுள்ள பிரதர் படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது.
ஜெயம் ரவி கோரிக்கை: இதில் பங்கேற்று பேசிய ஜெயம் ரவி படம் குறித்த பல்வேறு சுவாரசியங்களை பகிர்ந்து கொண்டார். இந்நிலையில் அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது, வாழு, வாழவிடு என்று கேட்டுக் கொண்டார். இது யாருக்கான மெசேஜ் என்று ரசிகர்கள் தற்போது கேள்வி எழுப்பி வருகின்றனர். யாரையும் இதில் இழுக்க வேண்டாம் என்றும் ஏதேதோ பெயர்களை சொல்லி ஏதேதோ செய்கிறார்கள், அவ்வாறு செய்ய வேண்டாம் என்றும் ஜெயம் ரவி கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் பர்சனல் விஷயங்களை பர்சனல் விஷயங்களாகவே இருக்க விடுமாறும் அவர் கேட்டுள்ளார். இதனிடையே, தன்னையும் பாடகி கெனிஷாவையும் இணைத்து வைத்து அவதூறு பரப்ப வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார்.
கெனிஷாவுடன் கூட்டணி: கெனிஷா 600 ஷோக்களில் பாடியவர் என்றும் தனியாக இருந்து மேலே வந்தவர் என்றும் ஜெயம் ரவி பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும் பல உயிர்களை காப்பாற்றியவர் என்றும் ஹுயூமன் சைக்காலஜிஸ்ட் என்றும் கெனிஷா குறித்து ஜெயம் ரவி கூறியுள்ளார். அவர்களை இந்த விஷயத்தில் இழுக்காதீர்கள் என்றும் பிற்காலத்தில் ஹீலிங் சென்டர் ஒன்றை துவங்கி, பலருக்கும் உதவும் எண்ணம் உள்ளதாகவும் அதை யாரும் கெடுக்க வேண்டாம் என்றும் கூறியுள்ள ஜெயம் ரவி, அதை யாரும் கெடுக்க முடியாது என்றும் உறுதியுடன் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











