அந்த படத்தை முதலில் தெலுங்கில் எடுக்கட்டும்.. அப்புறம் தமிழ்ல எடுக்கலாம்..! ஐடியா கொடுத்த ஜெயம் ரவி!

சென்னை: நடிகர் ஜெயம் ரவி இன்று தனது 38வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.

ஆறு அடி உயரத்தில் தமிழ் சினிமாவில் இருக்கும் கதாநாயகர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. அதில் ஒருவர் ஜெயம் ரவி.

முதல் படம் ஜெயம் வெற்றி பெற்றது. அதில் இருந்து அவர் ஜெயம் ரவி என்றே அழைக்கப்படுகிறார். சினிமாவில் அவரின் வளர்ச்சிக்கு பெரிய அளவில் உதவியவர் அவர் அண்ணன் மோகன் ராஜா.

அண்ணன் தம்பி

அண்ணன் தம்பி

சினிமா வாரிசு என்றால் பொதுவாக அப்பா மகனை ஹீரோவாக்கி அழகு பார்ப்பார். இவர் விஷயத்தில் அண்ணன், தம்பியை ஹீரோவாக்கி அழகு பார்த்தார். சினிமாவில் இறக்கி விட்டது அப்பாவாக இருந்தாலும், தோள் கொடுத்து தூக்கி விட்டது என்னவோ அண்ணன் தான். காலேஜ் போகும் பக்கத்து வீட்டு பையன் போல அறிமுகமான ரவி, எம். குமரன் படத்திற்காக உடலை ரெடி செய்தார். பெரும்பாலும், புகைப்பிடித்தல் மற்றும் மது அருந்தும் காட்சிகளில் நடிக்காத நடிகர். சந்தோஷ் சுப்பிரமணியபுரம் படத்திற்கு பிறகு அதுபோன்ற காட்சிகளில் நடிப்பதில்லை என சபதம் எடுத்தாராம்.

புதுமை வேண்டும்

புதுமை வேண்டும்

அவருக்கென்னெ முன்னணி படத்தொகுப்பாளரின் மகன், இயக்குனரின் தம்பி என மைக்செட் கட்டி விளம்பரம் செய்யுமளவிற்கு செல்வாக்கு இருந்தாலும், புதுப்புது முயற்சிகளை மேற்கொண்டு வெற்றி கண்டார். பெரும்பாலும் ஒரு படத்திற்கும் மற்றொரு படத்திற்கும் ஏதாவது வித்தியாசத்தைக் காட்டவேண்டும் என்பதில் உறுதியாய் நிற்கும் நடிகர் ஜெயம் ரவி.

ரகசியம்

ரகசியம்

சந்தோஷ் சுப்பிரமணியபுரம் படத்தில் வரும் பிரகாஷ்ராஜ் போல ஸ்ட்ரிக்ட் பேர்வழிதான் எடிட்டர் மோகனாம். தன்னுடைய அப்பா எவ்வளவு ஸ்ட்ரிக்ட் என்பதை பாஸ்கர் என்ற நண்பரிடம் மோகன்ராஜா சொல்ல, இது நல்ல கதை நான் படமாக்குகிறேன் என தெலுங்கில் எடுக்கப்பட்டது தான் பொம்மரிலு. அதன்பிறகு அப்படத்தை ரீமேக் எனச் சொல்லி ரவியை வைத்து எடுத்தார் மோகன்ராஜா. இந்த திட்டத்திற்கு உடந்தையாய் இருந்தவர் ஜெயம் ரவி.

குரலோவியம்

குரலோவியம்

எப்போதும் ஜலதோஷம் பிடித்தமாதிரியே பேசும் குரலை வைத்துக்கொண்டு எப்படி டப்பிங் பேசுவாய்? நிரந்தரமாக ஒரு டப்பிங் ஆர்டிஸ்ட் வச்சிக்கோ என பலர் இலவச அறிவுரை கொடுத்துள்ளனர். ஆனாலும், லீகாக் கதையில் வருவதுபோல, இது என்னுடைய குரல் இதை நான் மறைக்க மாட்டேன் என உறுதியாக நின்று சாதித்துள்ளார் ஜெயம் ரவி. எங்கேயும் காதல் படத்தில் உனக்கு பெக்யூலியர் வாய்ஸ் என ஹன்சிகா சொல்லும்போது, தன்னைத் தானே கிண்டல் செய்துகொண்டதும் அதற்கே.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X