அச்சச்சோ.. ரசிகர் மரணம்.. ஓடிப்போய் குடும்பத்துக்கு ஆதரவு சொன்ன ஜெயம் ரவி
சென்னை: நடிகர் ஜெயம் ரவியின் ரசிகர் ராஜா உயிரிழந்த நிலையில், அவரது வீட்டுக்கு சென்று ஆறுதல் கூறியுள்ளார். அதன் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது.
அண்ணன் மோகன் ராஜா இயக்கத்தில் வெளியான ஜெயம் படத்தின் மூலம் ஹீரோவாக தமிழ் சினிமாவில் அறிமுகமான ஜெயம் ரவி கடந்த பல ஆண்டுகளாக தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார்.

மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் அருள்மொழி வர்மனாக நடித்த ஜெயம் ரவி தற்போது மீண்டும் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வரும் தக் லைஃப் படத்தில் நடித்து வருகிறார்.
சைரன் ஓடவில்லை: இந்த ஆண்டு ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ், அனுபமா பரமேஸ்வரன், சமுத்திரகனி நடிப்பில் வெளியான சைரன் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடியில் சமீபத்தில் வெளியான அந்த படம் குறித்தும் ரசிகர்கள் யாரும் பிரேமலு உள்ளிட்ட படங்கள் அளவுக்கு இந்த படத்தை பற்றி பேசவே இல்லை.

பல படங்கள் கைவசம்: ராஜேஷ். எம் இயக்கத்தில் ஜெயம் ரவி, பிரியங்கா மோகன் நடிப்பில் வெளியான பிரதர் திரைப்படம் உருவாகி வருகிறது. மேலும், பெரிய பட்ஜெட்டில் ஜீனி படத்திலும் நடித்து வருகிறார். தக் லைஃப் படத்திலும் ஜெயம் ரவி நடித்து வருகிறார்.

ஜெயம் ரவி இரங்கல்: எம்ஜிஆர் நகர் ஜெயம் ரவி ரசிகர் மன்றத்தில் தலைவராக இருந்த, சென்னை கே கே நகர் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ராஜா (வயது 33) அவர்கள் சமீபத்தில் உடல் நலக்குறைவால் காலமானார். ஜெயம் ரவி மீது மிகுந்த அன்பு கொண்டிருந்தவரான ராஜா, ஜெயம் ரவி ரசிகர் மன்றம் சார்பில் பல நற்பணிகள் செய்து வந்தார். தனது ரசிகனின் திடீர் மரணத்தை அறிந்த ஜெயம் ரவி, ராஜாவின் வீட்டுக்குச் சென்று, அவரது குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் குடும்பத்திற்கு எந்த உதவியானாலும் தான் செய்து தருவதாக உறுதியளித்தார்.



Click it and Unblock the Notifications











