அற்புதமான மனிதர்.. பெரும் அதிர்ச்சி.. அவரது அழகான குடும்பம் இதை தாண்டி வரனும்.. ஜெயம் ரவி உருக்கம்!
சென்னை: இளம் நடிகர் சேதுராமனின் மறைவை ஏற்க முடியவில்லை என நடிகர் ஜெயம் ரவி உருக்கமாக தெரிவித்துள்ளார்.
Recommended Video
நடிகரும் மருத்துவருமான சேது ராமன் நேற்று இரவு திடீர் மாரடைப்பால் மரணமடைந்தார். சேது ராமன், நடிகர் சந்தானம், பவர் ஸ்டார் சீனிவாசன் ஆகியோருடன் இணைந்து கண்ணா லட்டு தின்ன ஆசையா என்ற படத்தில் அறிமுகமானார்.
இந்தப் படம் பெரும் வெற்றி பெற்று வசூலை குவித்தது. இதனை தொடர்ந்து அடுத்தடுத்து சந்தானத்துடன் வாலிப ராஜா, சக்கப்போடு போடு ராஜா ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

தோல் மருத்துவமனை
இதேபோல் 50 50 என்ற படத்திலும் நடித்துள்ளார் சேதுராமன். சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் மருத்துவ படிப்பை முடித்துள்ளார் சேதுராமன். தோல் மருத்துவத்தில் நிபுணரான சேதுராமன், சென்னை அண்ணாநகரில் Zi Clinic என்கிற தோல் சிறப்பு மருத்துவமனையை நடத்தி வந்தார்.

போட்டோக்கள் வைரல்
படங்களில் நடிப்பது போக தனது மருத்துவ தொழிலில் முழு நேரமாக சேவையாற்றி வந்தார் சேதுராமன். திரைத்துறையை சேர்ந்த பிரபலங்கள் பலரும் அவரது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். பிரபலங்கள் பலரும் அவரிடம் சிகிச்சை பெற்ற போட்டோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

உடைந்த சந்தானம்
திரைத்துறையில் பலருடனும் நல்ல நட்பு பாராட்டி வந்த சேதுராமனின் மறைவு திரைத்துறையினருக்கும் ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியாக உள்ளது. சேதுவின் மரணம் அவரது நெருங்கிய நண்பரான நடிகர் சந்தானத்தையும் உலுக்கியுள்ளது. அவரது மறைவு குறித்து திரைத்துறையினர் பலரும் சமூக வலைதளங்களில் இரங்கலை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
இன்னும் அதிர்ச்சிதான்
இந்நிலையில் நடிகர் ஜெயம் ரவி பதிவிட்டுள்ள இரங்கல் குறிப்பில், உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும் சேது.. இன்னும் அதிர்ச்சிதான்.. ஏற்கமுடியவில்லை.. அற்புதமான மனிதர்.. அவரது அழகான குடும்பம் இந்த இழப்பை தாண்டி வர பிரார்த்தனைகள் என தெரிவித்த உடைந்த இதயத்தை பதிவிட்டுள்ளார்.
எல்லாம் என்ன பண்றது?
ஜெயம் ரவியின் இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் பலரும், அடுத்த நிமிஷம் நிச்சயம் இல்லாத வாழ்க்கை சார் என பதிவிட்டுள்ளனர். ஒரு டாக்டரான அவருக்கே இந்த நிலைமைன்னா அப்போ நம்மள மாதிரி இருக்கறவங்க எல்லாம் என்ன பண்றது?? வாக்கைய நினைச்சா பயமா இருக்கு என பதிவிட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











