Brother: ஜெயம் ரவி -ராஜேஷ் கூட்டணியில் உருவாகும் படம்.. டைட்டிலை அறிவித்த படக்குழு!
சென்னை: நடிகர் ஜெயம் ரவி அடுத்தடுத்த படங்களில் சிறப்பான கதைக்களத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
அகிலன், பொன்னியின் செல்வன், பொன்னியின் செல்வன் 2 என அடுத்தடுத்த படங்கள் ஜெயம் ரவி நடிப்பில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. அடுத்ததாக ஜெயம் ரவி -நயன்தாரா காம்பினேஷனில் இறைவன் படம் ரிலீசாகவுள்ளது. இந்தப் படத்தின் ட்ரெயிலர் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியாகி சிறப்பான விமர்சனங்களை பெற்றுள்ளது.

ஜெயம் ரவி -ராஜேஷ் கூட்டணி படத்திற்கு பிரதர் என டைட்டில் அறிவிப்பு: நடிகர் ஜெயம் ரவி, பிரியங்கா மோகன், பூமிகா, சரண்யா பொன்வண்ணன், விடிவி கணேஷ் உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ள படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. விநாயகர் சதுர்த்தி பண்டிகையையொட்டி இந்த படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. சமீப காலங்களில் ஆக்ஷன், காமெடி களங்களில் நடித்து வரும் ஜெயம் ரவி, இந்தப் படத்தின் மூலம் மீண்டும் குடும்ப சென்டிமெண்டை கையிலெடுத்துள்ளார்.
முன்னதாக அவரது நடிப்பில் குடும்ப செண்டிமெண்டை மையமாக வைத்து வெளியான எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி, சந்தோஷ் சுப்ரமணியம், ஜெயம், சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும் போன்ற படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றன. இந்நிலையில் தற்போது ஜெயம் ரவி, பிரியங்கா மோகன் உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ள இந்தப் படமும் அந்த வரிசையில் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படத்திற்கு பிரதர் என்று பெயரிடப்பட்டுள்ளது.
இந்தப் படத்தில் சகோதரர் -சகோதரியின் பாசத்தை மையமாக கொண்டு கதைக்களம் அமைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எம் ராஜேஷ் கூட்டணியில் ஜெயம் ரவி இணைந்துள்ள பிரதர் படம் காமெடியை மையமாக கொண்டு உருவாகியுள்ளது. இந்த ஆண்டிற்குள் பிரதர் படம் வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், படத்தின் அடுத்தடுத்த அப்டேட் வெளியாகவுள்ளது. சென்னை, ஊட்டி, கொடைக்கானல், ஐதராபாத் போன்ற இடங்களில் இந்தப் படத்தின் சூட்டிங் நடந்து முடிந்துள்ளது.
இந்தப் படத்தை 6 முதல் 60 வயது வரை உள்ள அனைவரும் விரும்புவார்கள் என்று படத்தின் இயக்குநர் எம் ராஜேஷ் தெரிவித்துள்ளார். ஒரு கல் ஒரு கண்ணாடி படத்திற்கு பிறகு இந்தப் படத்தில் ஹாரீஸ் ஜெயராஜூடன் எம் ராஜேஷ் இணைந்துள்ளார். இவர்கள் கூட்டணியில் படத்தின் பாடல்கள் ரசிகர்களை அதிகமாக கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இன்றைய தினம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டிலை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஜெயம் ரவி வெளியிட்டு மகிழ்ச்சியையும் பகிர்ந்துள்ளார்.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்த போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. விரைவில் படம் ரிலீசாகவுள்ள நிலையில், படத்தின் ட்ரெயிலர், இசை வெளியீடு உள்ளிட்ட அடுத்தடுத்த அப்டேட்களை படக்குழுவினர் வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கலாம். இந்தப் படத்தில் ஜெயம் ரவி, பிரியங்கா மோகன் ஜோடி சேர்ந்துள்ளனர். இந்த காம்பினேஷன் ரசிகர்களுக்கு பிடித்தமானதாக அமையும் என்று எதிர்பார்க்கலாம். அடுத்ததாக ஜெயம் ரவியின் இறைவன் படம் ரிலீசாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











