Don't Miss!
- News
வாட்ஸ்அப்ல கட்டுக்கதைகளை சொல்லுவாங்க.. நம்பாதீங்க.. மாணவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அட்வைஸ்!
- Automobiles
மாருதி, ஹூண்டாயை அண்ணாந்து பாக்க வைத்த டாடா! சம்பவம் லோடிங்! தளபதி 67-ஐ விட எதிர்பார்ப்பு எகிறிகிட்டே போகுது!
- Sports
டி20 வரலாற்றில் இந்தியாவின் மகத்தான வெற்றி.. 3வது டி20ல் சுப்மன் கில் தந்த ஷாக்.. ஆடிப்போன நியூசி!
- Finance
மூலதன செலவு ரூ.10 லட்சம் கோடியாக அதிகரிப்பு.. நிதியமைச்சர் கொடுத்த சூப்பர் அப்டேட்!
- Lifestyle
எடையை வேகமாக குறைக்க ஆசைப்படுறீங்களா? அப்ப இந்த உணவுகளை தெரியாமகூட சேர்த்து சாப்பிடாதீங்க!
- Technology
அந்த ஹார்திக் பாண்டியா போன் நியாபகம் இருக்கா? அறிமுக தேதி உறுதி! விலை இதுதானா?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
தனி ஒருவன் 2 ஸ்கிரிப்ட் ரெடி.. உற்சாகத்தில் ஜெயம் ரவி.. ரசிகர்களும்தான்!
சென்னை : ஜெயம் ராஜா இயக்கத்தில் வெளியான ஜெயம் படம் மூலம் கோலிவுட்டில் சூப்பர் என்ட்ரி கொடுத்தவர் ஜெயம் ரவி.
தொடர்ந்து எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி உள்ளிட்ட குடும்ப சென்டிமெண்ட் கதைகளில் நடித்து கவனம் பெற்றார்.
மற்றவர்கள் இயக்கத்தில் நடித்தாலும் தன்னுடைய அண்ணன் ஜெயம் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் படங்கள் அதிகமாக ரசிகர்களை கவர்ந்துள்ளன.
லோகேஷுடன்
எடுத்துகொண்ட
போட்டோ...
தளபதி
67ல்
நடிக்கிறாரா..?:
ஜெயம்
ரவி
சொன்ன
ஷாக்கிங்
அப்டேட்

நடிகர் ஜெயம் ரவி
நடிகர் ஜெயம் ரவி, ஜெயம் படம் மூலம் திரைத்துறையில் என்ட்ரி கொடுத்தவர். தன்னுடைய அண்ணன் ஜெயம் ராஜாவின் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்த முதல் படத்திலேயே ஏராளமான ரசிகர்களை கவர்ந்து முன்னணி நடிகர்களின் வரிசையில் இடம்பெற்றுள்ளார். தொடர்ந்து சிறப்பான பல வெற்றிப் படங்களை கொடுத்து வருகிறார்.

சிறப்பான காம்பினேஷன்
ஜெயம் படத்தில் ஜெயம் ரவி மற்றும் சதா காம்பினேஷன் மிகச்சிறப்பாக அமைந்தது. இவர்களின் கெமிஸ்ட்ரி பேசப்பட்டது. ஜெயம் ரவியை பார்த்து சதா, போய்யா போ என்று கூறும் டயலாக் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. தொடர்ந்து எம் குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி, மழை, உனக்கு எனக்கும், சந்தோஷ் சுப்ரமணியம் உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார் ஜெயம் ரவி.

குடும்ப சென்டிமெண்ட் படங்கள்
இந்தப் படங்கள் குடும்ப சென்டிமெண்டை மையமாக கொண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டடித்தன. தொடர்ந்து குடும்ப சென்டிமெண்ட்டில் இருந்து விலகி, தாம் தூம், பேராண்மை, நிமிர்ந்து நில், போகன், தனி ஒருவன், மிருதன் போன்ற படங்களில் நடித்து ஆக்ஷன் ஹீரோவாகவும் தன்னை நிலை நிறுத்திக் கொண்டார் ஜெயம் ரவி.

ஆக்ஷன் ஹீரோ அவதாரம்
ஆனாலும் ஆக்ஷன் ஹீரோ அவதாரத்தைக் காட்டிலும் காதல் மற்றும் சென்டிமெண்ட் படங்களில் அதிகமான ஆர்வம் காட்டி வருகிறார் ஜெயம் ரவி. கோமாளி படத்தின் வெற்றியை தொடர்ந்து கடந்த ஆண்டில் ஜெயம் ரவி நடிப்பில் பொன்னியின் செல்வன் படம் வெளியாகி வெற்றிப் பெற்றுள்ளது. வரலாற்று பின்னணியில் வெளியான இந்தப்படத்தை இயக்குநர் மணிரத்னம் இயக்கியிருந்தார்.

ரசிகர்களை கவர்ந்த தனி ஒருவன்
தற்போது ஜெயம் ரவி கைவசம் இறைவன், அகிலன் உள்ளிட்ட படங்களை வைத்துள்ளார். இறைவன் படத்தில் ஜெயம் ரவியுடன் இணைந்துள்ளார் நயன்தாரா. இந்தப் படத்தின் போஸ்டர்கள் சில தினங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தன. ஜெயம் ரவி -நயன்தாரா ஜோடி முன்னதாக இணைந்திருந்த தனி ஒருவன் படமும் ரசிகர்களை கவர்ந்த படங்களில் ஒன்று.

தனி ஒருவன் 2 படம்
தனி ஒருவன் படத்தை ஜெயம் ராஜா இயக்கியிருந்த நிலையில், 32 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்தப் படம் 105 கோடி ரூபாய் வசூலை ஈட்டித் தந்தது. இந்தப் படத்தில் வித்தியாசமான வில்லன் கெட்டப்பில் மிரட்டியிருந்தார் அரவிந்த் சாமி.படத்தில் ஒவ்வொரு காட்சி அமைப்பும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

ஸ்கிரிப்ட் ரெடி
இந்தப் படத்தின் இரண்டாவது பாகம் குறித்து முன்னதாகவே ஜெயம் ராஜா அறிவித்திருந்த நிலையில், அவரும் ஜெயம் ரவியும் மற்ற ப்ராஜெக்ட்களில் பிசியாகினர். இந்நிலையில் தற்போது தனி ஒருவன் 2 படத்தின் ஸ்கிரிப்ட் ரெடியாகியுள்ளதாக ஜெயம் ரவி தன்னுடைய சமீபத்திய பேட்டியில் உற்சாகம் தெரிவித்துள்ளார்.

காத்திருக்கும் ஜெயம் ரவி
ஜெயம் ரவி கேரியரில் பெஸ்ட்டாக அமைந்த படங்களில் முக்கியமான படமாக தனி ஒருவன் படம் உள்ளது. இந்தப் படத்தின் இரண்டாவது பாகத்திற்காகவே ரசிகர்களை போலவே ஜெயம் ரவியும் காத்திருந்த நிலையில், தற்போது இந்தப் படம் குறித்த அப்டேட்டை வெளிப்படுத்தியுள்ளார். விரைவில் படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.