15 வருட வாழ்க்கை போச்சு.. விவாகரத்து கோரி விண்ணப்பித்த ஜெயம் ரவி!

சென்னை: மனைவியிடம் இருந்து விவாகரத்து கோரி நடிகர் ஜெயம் ரவி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு அக்டோபர் 10 தேதி விசாரணைக்கு வருகிறது.

ஜெயம் என்ற தமிழ் திரைப்படத்தில் அறிமுகமானவர் ரவி. இவர் பிரபல சினிமா எடிட்டர் மோகனின் இளைய மகன் ஆவார். இவரது மூத்த சகோதரர் ராஜா திரைப்பட இயக்குநர் ஆவர். அண்ணாவின் இயக்கத்தில் உருவான ஜெயம் படத்தின் மூலம், சினிமாவில் நடிகராக அறிமுகம் ஆனார் ரவி. இவர் நடித்த முதல் திரைப்படமே மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதால், படத்தின் பெயரை தன்னோடு சேர்ந்து கொண்டார். இதன் பிறகு அனைவரும் அவரை ஜெயம் ரவி என அனைத்து வருகின்னர்.

ஜெயம் ரவி: முதல் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஜெயம் ரவி அடுத்த படத்தில் நடித்தார். இவர் நடிப்பில் வெளியான பேராண்மை, நிமிர்ந்த நில், தனிஒருவன் என அனைத்து திரைப்படங்களும் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற.மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில், கதையின் நாயகனாக நடித்திருந்தார்.

காதல் திருமணம்: பல்வேறு வெற்றிப் படங்களில் நடித்து தற்போது முன்னணி தமிழ் நடிகராக உள்ள ஜெயம் ரவி, சுஜாதா விஜயகுமார் என்ற சினிமா மற்றும் சீரியல் தயாரிப்பாளரின் மகளான ஆர்த்தியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் கடந்த 2009 ஆம் மிகவும் கோலாகலமாக நடந்தது. இந்த திருமணத்தில் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்த தம்பதிகளுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளன.

jayam ravi aarthi ravi family court

15 ஆண்டு கால திருமண உறவில் இவர்களுக்குள்,கடந்த சில மாதமாக கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இந்த கருத்து வேறுபாட்டால், ஆர்த்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து ஜெயம்ரவியுடன் எடுத்துக்கொண்ட அனைத்து போட்டோக்களையும் டெலிட் செய்தார்.அதன் இருவரும் தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வருவதாகவும், விரைவில் இருவரும் பிரிய உள்ளதாகவும் சொல்லப்பட்டு வந்தது.

மனைவி பிரிந்தார்: இதைத்தொடர்ந்து, ஜெயம் ரவி தனது எக்ஸ் தள பக்கத்தில், தனது மனைவி ஆர்த்தியுடனான திருமண வாழ்க்கையில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இந்த முடிவை கனத்த இதயத்துடன் எடுப்பதாக குறிப்பிட்டு இருந்தார். இவர்களின் இந்த முடிவு அவரது ரசிகர்களை பெரும் துயரத்தில் ஆழ்த்திஉள்ளது.

விவாகரத்து கோரி விண்ணப்பம்: இந்நிலையில் மனைவியிடம் இருந்து விவாகரத்து கேட்டு ஜெயம் ரவி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், தனது மனைவியிடம் இருந்து விவாகரத்து வழங்க வேண்டும் என்றும், 2009 ஆண்டு பதிவு செய்த எங்கள் திருமண பதிவை ரத்து செய்ய வேண்டும் என கோரியுள்ளார். இந்த வழக்கு அக்டோபர் மாதம் 10 தேதி சென்னை மூன்றாவது குடும்ப நல நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X