முடியாத பஞ்சாயத்து.. மனைவி ஆர்த்தி மீது புகார் கொடுத்த ஜெயம் ரவி.. இன்னும் என்னவெல்லாம் இருக்கோ?

சென்னை: நடிகர் ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியை விட்டு பிரிவதாக தெரிவித்தார். ஆனால் இது தொடர்பாக ஆர்த்தி தரப்பில் இருந்து ஒரு வார்த்தைகூட முதலில் வெளிவரவில்லை. ஜெயம் ரவி இந்த விவாகரத்து தொடர்பாக அறிவிக்கும்போது இருவரும் பரஸ்பரமாக பேசி இந்த முடிவை எடுத்திருப்பார்கள் என பலரும் நினைத்தனர். ஆனால் ஒவ்வொரு தகவலாக வெளிவரும்போது பலருக்கும் அதிர்ச்சி ஏற்பட்டது.

அதிலும் குறிப்பாக பாடகி கெனிஷா பிரான்சிஸ் தான் இவர்களின் விவாகரத்துக்கு காரணம் என ஒருபக்கம் புகைச்சலை ஏற்படுத்தினர். ஆனால் இந்த புகைச்சலுக்கு ஜெயம் ரவி முடிவு கட்டினார். இந்நிலையில் தனது மனைவி ஆர்த்தி மீது ஜெயம் ரவி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

jayam ravi jayam ravi aarthi divorce jayam ravi divorce

தமிழ் சினிமாவில் கடந்த சில மாதங்களில் மிகவும் பரபரப்பாக பேசப்படும் பேச்சுகளில் படத்தின் புரோமஷன்கள் குறித்த பேச்சுக்களை விடவும் நடிகர்களின் விவாகரத்து குறித்த பேச்சுகள் அதிகமாகியுள்ளது. சில மாதங்களுக்கு முன்னர், ஜி.வி. பிரகாஷ் - சைந்தவி விவகாரத்து குறித்து பேசப்பட்டு வந்த நிலையில் தற்போது ஜெயம் ரவி - ஆர்த்தி குறித்த பேச்சுகள் அதிகமாகியுள்ளது. ஜெயம் ரவியும் ஆர்த்தியும் விரைவில் விவாகரத்து செய்யவுள்ளனர் என்ற பேச்சு அடிபட்டதில் இருந்து இப்போதுவரை இந்தப் பேச்சு ஓய்ந்தபாடில்லை.

jayam ravi jayam ravi aarthi divorce jayam ravi divorce

சுசித்ரா: ஜெயம் ரவி விவாகரத்தை அறிவிகும் முன்னரே, பாடகி சுசித்ரா, தனது யூட்டூப் தளத்தில் ஜெயம் ரவி - ஆர்த்தி விவாகரத்து தொடர்பாக பேசியிருந்தார். அதில், இந்த விவாகரத்தில் என் ஆதரவு ஜெயம் ரவிக்கு தான். ஆர்த்தியுடன் வாழவே முடியாது, அவர் மிகவும் ஆடம்பரமான பெண். ஜெயம் ரவி இரவு பகல் பார்க்காமல் வேலை செய்து கொண்டே இருக்க வேண்டும். வேலை முடித்து வீட்டுக்கு சென்றாலும் அர்த்தி என்ன மனநிலையில் இருப்பார் என்று சொல்லவே முடியாது. ஏதோ அவர் அழகாக இருந்ததால், இத்தனை ஆண்டுகள் அவரின் முகத்தை பார்த்து ஜெயம் ரவி வாழ்ந்துவிட்டார். ஆனால் அழகு எத்தனை நாளைக்கு இருக்கும். அது மட்டுமில்லாமல் ஜெயம் ரவி குடும்பம் மற்றவர்கள் போல் இல்லாமல், சினிமாவில் ரொம்ப கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்த குடும்பம். அவர்களின் குடும்பம் எப்போதும், மற்றவர்களை மதிப்பவர்கள்" என்று பேசியிருந்தது இணையத்தில் வேகமாக பரவியது எல்லாம் தனிக்கதை.

jayam ravi jayam ravi aarthi divorce jayam ravi divorce

கெனிஷா: தன்னையும் பாடகி கெனிஷாவையும் இணைத்து சமூக வலைதளங்களில் பல்வேறு தகவல்கள் வருகின்றன. எனது பர்ஷ்னல் வாழ்க்கை குறித்து பேசவேண்டாம். என்னையும் பாடகி கெனிஷாவையும் இணைத்து பேசுகின்றீர்கள் இவையெல்லாம் வேண்டாம். பாடகி கெனிஷா ஒரு ஹீலர். நானும் பாடகி கெனிஷாவும் இணைந்து எதிர்காலத்தில் ஒரு ஹீலிங் சென்டர் தொடங்கலாம் என இருக்கின்றோம் எனக் கூறினார்.

ஆர்த்தி மீது புகார்: சில தினங்களுக்கு முன்னர் தனது சமூகவலைதளப் பக்கத்தினையும் அதன் பாஸ்வேர்டையும் மனைவி ஆர்த்தியிடம் இருந்து மீட்டதாக தெரிவித்தார். இந்நிலையில் தனது மனைவி ஆர்த்தியிடம் இருக்கும் தனது உடமைகளை மீட்டுத் தரக்கோறி நடிகர் ஜெயம் ரவி, மனைவி ஆர்த்தி மீது அடையார் துணை காவல் ஆணையரிடம் புகார் மனு அளித்துள்ளார் எனவும், அதில் சென்னை ஈ.சி.ஆர் சாலையில் உள்ள ஆர்த்தியின் வீட்டில் உள்ள தனது உடமைகளை மீட்டுத் தரக்கோறியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X