கோமாளி வசூலால் உற்சாகம் - ஹாட்ரிக் வெற்றியால் உச்சத்துக்கு போன ஜெயம் ரவி மார்கெட்

Recommended Video

Comali Trailer | Jayam Ravi | எனக்கும் சமுதாய பொறுப் இருக்கு- வீடியோ

சென்னை: அடங்கமறு, டிக் டிக் டிக், கோமாளி என ஜெயம் ரவி தொடர்ந்து மூன்ற படங்களை வெற்றிப் படங்களாக கொடுத்துள்ளதால், அவருடைய திரையுலக மார்க்கெட் மீண்டும் உச்சத்திற்கு சென்றுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழ் சினிமாவில் இப்போதைக்கு அடுத்தடுத்து வெற்றிகளைக் கொடுத்த ஹீரோக்களில் ஜெயம் ரவியும் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளார். கடந்த வருடம் அவர் நடித்து வெளிவந்த டிக் டிக் டிக், அடங்க மறு ஆகிய படங்கள் வியாபார ரீதியாகவும் வெற்றி பெற்ற படங்களாக அமைந்தன.

Actor Jayam Ravi gives hat-trick success movie

இந்நிலையில் அடங்கமறு, டிக் டிக் டிக் என இவர் நடித்த இரண்டு படங்களும் கடந்த ஆண்டுக்கான சைமா விருது பெற்றன. இந்த வருடம் அவர் நடித்து கடந்த வாரம் வெளிவந்த கோமாளி படமும் வெற்றிப் படமாக அமைந்துவிட்டது. இதன் வெற்றியை பார்ட்டி வைத்து கொண்டாடி இருக்கின்றனர்.

தனி ஒருவன் படத்தின் வெற்றிக்குப் பிறகே ஜெயம் ரவியின் மார்க்கெட்டும் உயர்ந்தது. அதன்பின் அவர் நடித்து வெளிவந்த படங்களில் பூலோகம், வனமகன் படங்கள் மட்டும்தான் சரியாகப் போகவில்லை. மிருதன், போகன் படங்களும் தயாரிப்பாளர்களுக்கு ஏமாற்றமளித்தன.

Actor Jayam Ravi gives hat-trick success movie

இந்நிலையில் கடந்த வாரம் ஜெயம் ரவி நடிப்பில் உருவான கோமாளி படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டது. அந்தப் படத்தில் ஜெயம் ரவி பேசும் வசனம் ரஜினிகாந்த்தை நேரடியாக தாக்குவதாக அமைந்துவிட்டது. இதனால் ரஜினியின் ரசிகர்கள் அனைவரும் கொதித்தெழுந்ததோடு, உடனடியாக அந்த காட்சியை நீக்கவேண்டும் என்று போர்க்கொடி உயர்த்தினார்கள்.

ரஜினி ரசிகர்களின் திடீர் எதிர்ப்பினால், அந்தக் காட்சி படத்தில் இருந்து நீக்கப்பட்டது. அதோடு, கோமாளி படத்திற்கு இலவசமாகவே விளம்பரம் கிடைத்துவிட்டதை நினைத்து படக்குழுவினர் மகிழ்ச்சியடைந்தனர். படக்குழுவினர் நினைத்தது போலவே இலவச விளம்பரம் படத்திற்கு நல்ல ஓபனிங்கை கொடுத்தது.

Actor Jayam Ravi gives hat-trick success movie

கடந்த வாரம் கோமாளி படம் உலகம் முழுவதும் வெளியானது. கோமாளி படத்தை தியேட்டரில் பார்த்த பெரும்பாலானவர்கள், படம் நன்றாக வந்துள்ளதாக மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். இப்படத்திற்கான விமர்சனமும் கலவையான விமர்சனமாகவே வந்துள்ளன. இதனால் படத்தின் வசூலும் நிச்சயம் எதிர்பார்த்த அளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

Actor Jayam Ravi gives hat-trick success movie

தற்போது கோமாளி படம் வெளியாகி மூன்று நாட்கள் ஆனதை அடுத்து, இதன் வசூல் நிலவரம் தற்போது தெரியவந்துள்ளது. கோமாளி படம் முதல் வார இறுதியில் சுமார் 15 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அடங்கமறு, டிக் டிக் டிக், கோமாளி ஆகிய மூன்று திரைப்படங்களின் வெற்றியால் ஜெயம் ரவியின் மார்க்கெட் மீண்டும் உச்சத்திற்கு போகும் என திரைப் பிரபலங்கள் உறுதியாகக் கூறுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X