Jayam ravi: யோகிபாபுவை இயக்கும் ஜெயம்ரவி.. 500 ரூபாய் கொடுத்து புக் செய்திருக்காராம்!
சென்னை: நடிகர் ஜெயம்ரவி அடுத்தடுத்த படங்களில் நடித்து ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அவரது நடிப்பில் கடந்த 16ம் தேதி சைரன் படம் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. இந்தப் படத்தில் ஜெயம் ரவியுடன் இணைந்து கீர்த்தி சுரேஷ், அனுபமா பரமேஸ்வரன், யோகிபாபு, சமுத்திரக்கனி உள்ளிட்டவர்கள் நடித்திருந்தனர். இந்தப் படத்தில் ஆம்புலன் ஓட்டுநர் மற்றும் கைதியாக இருவேறு கெட்டப்புகளில் நடித்திருந்தார் ஜெயம்ரவி. படத்தில் தான் செய்யாத குற்றத்திற்காக சிறை தண்டனை அனுபவிக்கும் கைதியாக ஜெயம்ரவி நடித்திருந்தார். மேலும் படத்தில் தந்தை -மகள் பாசத்தையும் மையமாக வைத்து கதைக்களம் உருவாக்கப்பட்டிருந்தது.
நடிகர் ஜெயம் ரவியின் நடிப்பில் கடந்த ஆண்டில் பொன்னியின் செல்வன் 2 மற்றும் இறைவன் படங்கள் வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தன. இந்தப் படங்களை தொடர்ந்து இந்த ஆண்டின் துவக்கத்திலேயே சைரன் படம் வெளியாகியுள்ளது. இந்தப் படங்களை தொடர்ந்து தற்போது பிரதர், ஜெனி, காதலிக்க நேரமில்லை ஆகிய படங்களில் நடித்து வருகிறார் ஜெயம்ரவி. மேலும் தனது அண்ணன் இயக்கத்தில் தனி ஒருவன் 2 படத்திலும் அவர் நடிக்கவுள்ளார். அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வருகிறார் ஜெயம்ரவி.

நடிகர் ஜெயம்ரவி: நடிகர் ஜெயம்ரவியின் அடுத்தடுத்த படங்கள் மாஸ் காட்டி வருகின்றனர். ஜெயம் படத்தில் துவங்கிய இவரது திரைப்பயணம் தொடர்ந்து தற்போது சைரன் படம் வரைவில் மிகச்சிறப்பாக அமைந்து வருகிறது. கடந்த 16ம் தேதி ஜெயமரவி, கீர்த்தி சுரேஷ், அனுபமா பரமேஸ்வரன், யோகிபாபு, சமுத்திரக்கனி ஆகியோர் லீட் கேரக்டர்களில் நடித்திருந்த சைரன் படம் வெளியானது. இந்தப் படத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர், கைதி என இருவேறு கெட்டப்புகளில் ஜெயம் ரவி நடித்திருந்தார். ஜிவி பிரகாஷ் இசையில் படத்தின் பாடல்கள் சிறப்பாக அமைந்திருந்தன. தந்தை -மகள் பாசத்தை மையமாக கொண்டு இந்தப் படத்தின் கதைக்களம் அமைந்திருந்தது.
அடுத்தடுத்த படங்கள்: இந்தப் படங்களை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார் ஜெயம்ரவி. ராஜேஷ் இயக்கத்தில் பிரதர் படத்தில் நடித்து வருகிறார் ஜெயம் ரவி. இந்தப் படத்தில் காமெடியுடன் குடும்ப சென்டிமெண்ட்டும் தூக்கலாக அமைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதையடுத்து ஜெனி. காதலிக்க நேரமில்லை போன்ற படங்களிலும் நடித்து வருகிறார் ஜெயம் ரவி. இதில் காதலிக்க நேரமில்லை படத்தை கிருத்திகா உதயநிதி இயக்கி வருகிறார். இந்தப் படங்களை தொடர்ந்து தன்னுடைய அண்ணன் இயக்கத்தில் தனி ஒருவன் 2 படத்திலும் ஜெயம்ரவி நடிக்கவுள்ளார்.
இயக்குநராகும் ஜெயம்ரவி: இதனிடையே தான் விரைவில் இயக்குநர் அவதாரமும் எடுக்கவுள்ளதாக ஜெயம்ரவி தன்னுடைய சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார். தான் 3 ஸ்கிரிப்ட்களை உருவாக்கியுள்ளதாகவும் ஒரு கதையை நடிகர் யோகிபாபுவை வைத்து இயக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். இதுகுறித்து யோகிபாபுவிடம் தான் பேசியுள்ளதாகவும் 500 ரூபாய் அட்வான்ஸ் கொடுத்து அவரை புக் செய்துள்ளதாகவும் ஜெயம் ரவி கூறியுள்ளார். தன்கையில் இருந்த காசை கொடுத்து அவரை உடனடியாக புக் செய்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். மற்றொரு ஸ்கிரிப்ட் தனக்கு மட்டுமே பொருந்தும் என்றும் அதில் தான் மட்டுமே நடிப்பேன் என்றும் கூறியுள்ளார்.
ஜெயம்ரவி இயக்கத்தில் யோகிபாபு: மூன்றாவது ஸ்கிரிப்ட்டில் யார் வேண்டுமானாலும் நடிக்கும்வகையில் ஸ்கிரிப்ட்,டை எழுதியுள்ளதாகவும் அதில் தானும் நடிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார். கூடியவிரைவில் தான் இயக்கவுள்ள படம் குறித்த அறிவிப்பை வெளியிட உள்ளதாகவும் தன்னுடைய கம்ஃபர்ட் சோனில் இருந்து விலகி இந்தப் படங்களை இயக்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த ஆண்டிலேயே தன்னுடைய இயக்கத்தில் உருவாகவுள்ள இந்தப் படத்தில் அறிவிப்பு வெளியாகவும் வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











